கோடை விடுமுறை

கோடை விடுமுறை (summer vacation) அல்லது கோடை இடைவேளை என்பது பள்ளி ஆண்டுக்கும் பள்ளிக் கல்வியாண்டிற்கும் இடையிலான கோடையில் ஏற்படும் பள்ளி விடுமுறையினைக் குறிக்கிறது. மாணவர்கள் இரண்டு வாரங்கள் முதல் மூன்றரை மாதங்கள் வரை விடுமுறையில் இருப்பார்கள். நாடு மற்றும் மாவட்டத்தைப் பொறுத்து, ஊழியர்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாக இதில் இருந்து விலக்கப்படலாம்.

எசுப்பானியா, போர்த்துகல், அயர்லாந்து குடியரசு, இத்தாலி, கிரேக்கம், சியயா, லித்துவேனியா, லாத்வியா,லெபனான்,உருமேனியா மற்றும் ரஷ்யாவில், கோடை விடுமுறை என்பது பொதுவாக மூன்று மாதங்கள் ஆகும், ஆத்திரேலியா, பிரேசில்,ஐக்கிய இராச்சியம், பாக்கித்தான், வங்காளதேசம், இந்தியா, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் மெக்சிக்கோஆகிய நாடுகளில் இரண்டு முதல் ஆறு வாரங்கள் (சில நேரங்களில் 3 மாதங்கள்) கோடை விடுமுறை விடப்படுகிறது. .

கோடை விடுமுறையின் தாக்கம் பற்றிய ஆராய்ச்சி கலவையான முடிவுகளைக் கொண்டுள்ளது.[1] கோடை கற்றல் இழப்பு [2] என்பது மாணவர்களின் கற்றைலைப் பாதிப்பதனைக் குறிக்கிறது. இந்த விடுமுறையின் சரியான விளைவுகள் என்ன என்பதை வரையறுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கருதப்படுகிறது.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. [3]

நாடு வாரியாக தொகு

ஆசியா தொகு

இந்தியா தொகு

இந்தியாவில், கோடை விடுமுறையானது சுமார் 1 மாதம் வரை நீடிக்கும், அதற்கான நாட்களை அரசாங்கம் தீர்மானிக்கிறது. வழக்கமான கோடை விடுமுறை மார்ச் மாத இறுதியில் இருந்து சூன் தொடக்கத்தில் இருக்கும்.

மேலும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Polikoff, David M. Quinn and Morgan (2017-09-14). "Summer learning loss: What is it, and what can we do about it?". Brookings (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
  2. The summer slide: what we know and can do about summer learning loss. Alexander, Karl L.; Pitcock, Sarah; Boulay, Matthew. New York, NY. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8077-5799-4. இணையக் கணினி நூலக மையம்:957134420. 
  3. Stewart, Hilary (2018). "The cost of school holidays for children from low income families". Childhood 25 (4): 516–529. doi:10.1177/0907568218779130. பப்மெட்:30473595. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடை_விடுமுறை&oldid=3799711" இலிருந்து மீள்விக்கப்பட்டது