கோட்டா, இராசத்தான்
கோட்டா (Kota, இந்தி: कोटा), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே 240 கிலோமீட்டர்கள் (149 mi) தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும்.
கோட்டா | |
---|---|
அடைபெயர்(கள்): இராஜஸ்தானின் கல்வி மற்றும் தொழில் நகரம் | |
ஆள்கூறுகள்: 25°0′0″N 76°10′0″E / 25.00000°N 76.16667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | கோட்டா |
கோட்டம் | கோட்டா |
அரசு | |
• வகை | Democratic |
• நிர்வாகம் | மாநகராட்சி |
• மேயர் | Mahesh Vijay (BJP) |
• Member of Parliament Kota-Bundi | Om Birla (BJP) |
• Member of Legislative Assembly Kota South | Sandeep Sharma (BJP) |
• Member of Legislative Assembly Kota North | Prahlad Gunjal (BJP) |
பரப்பளவு | |
• மொத்தம் | 527 km2 (203 sq mi) |
ஏற்றம் | 271 m (889 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 10,01,694 |
• தரவரிசை | 46வது இடம் |
• அடர்த்தி | 1,900/km2 (4,900/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• வட்டார மொழிகள் | இராஜஸ்தானி மொழி, ஹரௌதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 324001 to 324011 and 324022 |
தொலைபேசி குறியீடு எண் | 0744 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ- |
பாலின விகிதம் | 895 ♀/♂ |
இணையதளம் | kota |
அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kota District Census 2011 Handbook: VILLAGE AND TOWN WISE PRIMARY CENSUS ABSTRACT (PCA)" (PDF). Censusofindia.gov.in. p. 29 (pdf) Urban Section. பார்க்கப்பட்ட நாள் 19 April 2016.
- ↑ "2011 census: Kota Municipal Corporation Demographics". Censusofindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-04-07.
- ↑ "Kota (Kota, Rajasthan, India) - Population Statistics and Location in Maps and Charts - City Population". Citypopulation. de. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
வெளியிணைப்புகள்
தொகு- Official Website of Kota District பரணிடப்பட்டது 2012-07-23 at the வந்தவழி இயந்திரம்
- Rajasthan Tourism பரணிடப்பட்டது 2008-08-04 at the வந்தவழி இயந்திரம்
- Kota Detailed Information with Map
- Kota Information
- A tourist's description of Kota பரணிடப்பட்டது 2008-09-27 at the வந்தவழி இயந்திரம்
மேலும் அறிய
தொகு- Tod James Annals and Antiquities of Rajasthan: Or, The Central and Western Rajpoot States of India Published 2001 Asian Educational Services பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1289-2 pp. 407–690