கோட்டூர் மலை
கோட்டூர் மலை (Kotturmalai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு மலை கிராமம் ஆகும்.
கோட்டூர் மலை | |
---|---|
மலை கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636810 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது பென்னாகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 312 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பிற தகவல்கள்
தொகுஇந்த மலை கிராமமானது மலையடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி கியைது. அதனால் ஏழு கிலோமீட்டர் நடந்தே செல்லவேண்டியுள்ளது. இதனால் தேர்தலின்போது இந்த மலை கிராமத்துக்கு வாக்குப் பதிவு யந்திரங்கள் கழுதை மேல் பொதி ஏற்றப்பட்டு கொண்டு செல்வது வழக்கம்.[2] இந்த கிராமத்தில் 2021 ஆண்டு காலகட்டத்தில் 329 வாக்காளர்கள் இருந்தனர். தங்களுக்கு சாலை வசதி ஏற்பட்டுத்தித் தரவேண்டி இக்கிராம மக்கள் பல்லாண்டுகளாக கோரிவருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்தபோதெல்லாம், இவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி வாக்களிக்க வைத்தர். ஆனால் இவர்களது கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்கவில்லை.[3]
மேற்கோள்
தொகு- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Pennagaram/Kotturmalai
- ↑ தமிழ்நாடு வாக்குப் பதிவு: கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள் - தேர்தலை புறக்கணித்தார்களா தருமபுரி மலை கிராம மக்கள்?, செய்தி, பிபிசி தமிழ், 2019 ஏப்ரல் 18
- ↑ தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தருமபுரி மலை கிராம மக்கள், செய்தி இந்து தமிழ், 2021 ஏப்ரல் 6