கோத ரவி

கேரளாவின் சேர பெருமாள்

கோத ரவி (Goda Ravi) ( சுமார் 905/06– 943/44 பொ.ச.) தென்னிந்தியாவின் இடைக்கால கேரளாவை ஆண்ட சேர பெருமாள் அரசர் ஆவார். கோத ரவியின் ஆட்சியில் சேரப் பெருமார்களுடன் சோழர்களின் உறவுகள் பலப்படுத்தப்பட்டன. தமிழ் நாட்டில் சோழ இளவரசர் இராஜாதித்தனுடன் பணியாற்றிய கேரள ராணுவ வீரர்கள் பற்றிய பல பதிவுகள் குறிப்பிடப் பட்டுள்ளன.[4] நெடும்புரம் தளியைச் வடக்காஞ்சேரி சேர்ந்த கல்வெட்டு ஒன்று கோத ரவியைக் குறிப்பிடுகிறது.[5]

கோத ரவி
சேர பெருமாள் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார் 905/06– 943/44 பொ.ச.[1]
முன்னையவர்கோத ரவி (அல்லது) கேரள கேசரி[2]
பின்னையவர்இந்து/இந்தேசுவரன் கோதா[3]
மரபுமகோதயபுரத்தின் சேரர்கள்
மதம்இந்து சமயம்

ஆட்சி

தொகு

கோத ரவியின் ஆட்சி ஆண்டுகளைப் பற்றிய பதிவுகள் (13 முதல் 30 வரை) , இராணிக்குளம், சோக்கூர் (கொடுவள்ளிக்கு அருகில் உள்ள புதூர் கிராமம்), நெடும்புரம் தளி ( வடக்காஞ்சேரி ), அவிட்டத்தூர், திருபிரங்கோடு, பொரங்காத்திரி, இந்தியூர் (கோட்டக்கல்), திருப்பூணித்துறை ஆகிய இடங்களில் காணப்படும் கோயில் கல்வெட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. [5] [6] கோயில் பதிவுகளில் ஆல-கோயில், சேர ராணிகள் (ரவிப்பிராட்டி மற்றும் சேரமான் மகா தேவி), "சேனாபதி" (அரச இராணுவத்தின் தலைவர்), மூழிக்குளம் ஒப்பந்தம் பற்றிய தகவல், வேம்பநாட்டின் ( ஆலப்புழா ) தலைவர்கள் , வள்ளுவநாடு (பின்னர் "ராயிரா ராவர்" என்ற பட்டத்துடன்) போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. [5] [6]

கோத ரவி முன்பு சேர பெருமாள் வம்சத்தின் மன்னன் விஜயராகவனுடன் அடையாளம் காணப்பட்டார்.

முடிசூடிய ஆண்டு

தொகு

நெடும்புரம் தளியின் தலைவர்கள், கோத ரவியின் 17வது ஆட்சியாண்டில் கூடி நில மானியத்தை ஏற்றுக்கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கிறது.[7]

 
அவிட்டத்தூர் கோவில்

சான்றுகள்

தொகு
  1. Devadevan, Manu V. (2020). "Changes in Land Relations and the Changing Fortunes of the Cera State". The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108857871.
  2. Devadevan, Manu V. (2020). "Changes in Land Relations and the Changing Fortunes of the Cera State". The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108857871.
  3. Devadevan, Manu V. (2020). "Changes in Land Relations and the Changing Fortunes of the Cera State". The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108857871.
  4. Ali, Daud (2017). "Companionship, Loyalty and Affiliation in Chola South India". Studies in History 33: 36–60. doi:10.1177/0257643016677455. https://journals.sagepub.com/doi/10.1177/0257643016677455?icid=int.sj-abstract.similar-articles.1. 
  5. 5.0 5.1 5.2 Narayanan, M. G. S. (2013). Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks. pp. 65–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188765072.Narayanan, M. G. S. (2013) [1972].
  6. 6.0 6.1 Devadevan, Manu V. (2020). The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. pp. 120 and 128-29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108857871.
  7. Devadevan, Manu V. (2020). "Changes in Land Relations and the Changing Fortunes of the Cera State". The 'Early Medieval' Origins of India. Cambridge University Press. pp. 129–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108857871.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத_ரவி&oldid=3452247" இலிருந்து மீள்விக்கப்பட்டது