அதிரடி கமாண்டோ பட்டாலியன்

(கோப்ரா (படை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உறுதிகொண்ட செயலுக்கான அதிரடிப்படை பட்டாலியன் (Commando Battalion for Resolute Action) அல்லது கோப்ரா என்பது இந்தியாவின் நக்சலைடுடன் மோதும் மத்திய பின்னிருப்பு காவல் படையின் ஒரு பிரிவாகும்.[1][2] இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்தியேக கரந்தடிப்போர்முறை தாக்குதல் கற்ற படையாகும். இத்தகைய சிறப்பு பயிற்சியின் மூலம் சிறிய நக்சலைட் குழுக்கள் சிதைக்கப்படுகிறது[3]. ஒரு பட்டாலியன் என்பது 500 முதல் 1500 படை வீரர்கள் கொண்ட குழுவாகும்.

ஆயுதங்கள்

தொகு

இந்திய துணை இராணுவத்திலேயே வலிமையான ஆயுதங்கள் கொண்ட படை இந்த கோப்ரா படைதான். 1300 கோடி ரூபாய் செலவில், காலாட்படை வீரர்களுக்கெல்லாம் நீள் துப்பாக்கிகள், ஏகே-47 துப்பாக்கிகள், எக்ஸ்-95, ப்ரவுனிங் ஹை-பவர் க்லாக் கைத்துப்பாக்கிகள், ஹெக்லர் & கோச் எம்பி5 இயந்திரத் துப்பாக்கிகள், ட்ரக்னவ் எஸ்விடி, ஹெக்லர் & கோச் எம்.எஸ்.ஜி-90 மற்றும் காரல் குஸ்டவ் ரீகொயிலீஸ் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன இலத்திரனியல் கண்காணிப்புக் கருவிகளாலும், காத்திரமான பயிற்சிபெற்ற குழுக்களாலும் கோப்ரா படை அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள்

தொகு

சிக்கர் ஊரிலுள்ள தீவிரவாத எதிர்ப்புப்பள்ளியிலும், மிசோரமிலுள்ள கிளர்ச்சி எதிப்பு யுத்தப் பள்ளியிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏமாற்று வித்தை மற்றும் குழுத் தாக்குதலிலும் பயிற்சியளிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Dholabhai, Nishit (2008-09-07) 9803136.jsp "COBRA on way to fight Naxalites in Jharkhand" தி டெலிகிராஃப், retrieved 2009-06-19
  2. Indian COBRA Troops to Take on Maoist Insurgents[தொடர்பிழந்த இணைப்பு] Defence News
  3. Mund, Prasenjit; Mandal Caesar (2009-06-19). "Shadow warriors:Guerrillas wary of Cobra strike" (in English). The Times of India (Kolkata): 2.