கோமதி சாகர் விரைவு தொடருந்து

தமிழ்நாட்டின் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் என்ற இரு நிலையங்களுக்கு இடையே 16093 மற்றும் 16094 என்ற எண்களின் கீழ் தென்னிந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் விரைவு தொடருந்து, கோமதி சாகர் விரைவு தொடருந்து ஆகும்.

கோமதி சாகர் விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
முதல் சேவை1 சனவரி 1991; 33 ஆண்டுகள் முன்னர் (1991-01-01)
நடத்துனர்(கள்)தென்னிந்திய ரெயில்வே
வழி
தொடக்கம்சென்னை சென்டரல்
இடைநிறுத்தங்கள்37
முடிவுலக்ணோ சார்பாக்
ஓடும் தூரம்2,089 km (1,298 mi)
சேவைகளின் காலஅளவுவாரமிருமுறை
தொடருந்தின் இலக்கம்16093 / 16094
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள்,படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி இல்லை
காணும் வசதிகள்Rake Sharing with 16031 / 160
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge
வேகம்55.5 km/h (34 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்து 16093 என்ற எண்ணில் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து லக்னோ நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக 16094 என்ற எண்ணில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நிலையத்திலிருந்து டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.[1]

பெயர்க்காரணம் தொகு

லக்னோலக்கிம்பூர்சுல்தான்பூர்ஜௌன்பூர் போன்ற 15 நகரங்களின் வழியாக ஓடக்கூடிய கங்கை நதியின் துணை ஆறுகளில் ஒன்றான கோமதி என்ற ஆற்றின் பெயரே இதே நகரங்களின் வழியாக இயக்கப்படும் இந்த தொடருந்திற்க்கும் பெயராக சூட்டப்பட்டுள்ளது.

பெட்டிகளின் அமைப்பு மற்றும் எண்ணிக்கை தொகு

மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மூன்று முன் பதிவு செய்யக்கூடிய செய்யக்கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எட்டு முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் ஆறு உட்காரும் வசதி கொண்ட பெட்டிகள் இரண்டு மற்றும் உயர்தர சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் இருபது பெட்டிகளைக் கொண்டு பயணிக்கும் இந்த கோமதி சாகர் விரைவு தொடருந்து சமையல் வசதிகொண்ட பெட்டி இல்லாததாகும் பெட்டி இல்லாததாகும்.[2]

விழாக்காலங்களில் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை இவற்றைப் பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை ரயில்வே துறையினரால் மாற்றப்படலாம்.

வழித்தடங்கள் தொகு

16093 மற்றும் 16094 என்ற எண்களை எண்களை இயக்கப்படும் இந்த கோமதி சாகர் விரைவு விரைவு தொடருந்து புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்பட்டு சூலூர் பேட்டை, கூடூர் சந்திப்பு, நெல்லூர், ஓங்கோல், தெனாலி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, வாராங்கல், பல்கர்ஷா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, இட்டரசி, போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, மற்றும் கான்பூர் சென்ட்ரல் வழியாக லக்னோ சந்திப்பை சென்றடைகிறது.

மின் தடம் தொகு

ஆரம்ப நிலையம் முதல் இறுதி நிலையம் நிலையம் முதல் இறுதி நிலையம் வரை இந்த தொடருந்து மின்சார தடத்தின் வழியாகவே பயணிக்கிறது. ஈரோடு சந்திப்பு அல்லது ராயபுரம் ரயில் பெட்டி தயாரிப்பு துறையினரால் பராமரிக்கப்படும் WAP-4 என்ற இழுவை இயந்திரத்தின் இயந்திரத்தின் மூலம் இயக்கப்படுகிறது.

வண்டி எண் 16093 தொகு

'கோமதி சாகர் விரைவு தொடருந்து வண்டியானது டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, மற்றும் சனிக்கிழமை என வாரம் இரண்டு நாட்களும் காலை 05.15 மணிக்கு இயக்கப்பட்டு சூலூர் பேட்டை, கூடூர் சந்திப்பு, நெல்லூர், ஓங்கோல், தெனாலி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, வாராங்கல், பல்கர்ஷா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, இட்டரசி, போபால் சந்திப்பு, ஜான்சி சந்திப்பு, மற்றும் கான்பூர் சென்ட்ரல் என 46 நிறுத்தங்களையும், 314 நிலையங்களையும் மணிக்கு 53 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 39 மணி 25 நிமிடங்களில் பயணித்து நேரங்களில் லக்னோ சந்திப்பு நிலையத்தை அடுத்த நாள்(புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மாலை 08.40 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2088 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்து தனது பயணத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் சூலூர் பேட்டை நிலையங்களுக்கு இடையிலான வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[3]

வண்டி எண் 16094 தொகு

மறுமார்க்கமாக 16094 என்ற எண்ணைக் கொண்ட இந்த தொடருந்து வண்டியானது லக்ணோ சந்திப்பு நிலையத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என வாரத்திற்கு இரண்டு முறை மாலை 04.20 மணிக்கு இயக்கப்பட்டு 44 நிறுத்தங்களையும் கடக்க மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 41 மணி 50 நிமிடங்களில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை இரண்டாம் நாள் (புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை) காலை 10.10 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 2088 கிலோ மீட்டர் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 102 கிலோமீட்டர் வரை இதன் பயணத்தின் போது இயக்கப்படுகிறது. இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்னிந்திய ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Electric engines to run through Jhansi". Times of India. 1 December 2013. https://timesofindia.indiatimes.com/city/kanpur/Electric-engines-to-run-through-Jhansi/articleshow/26681799.cms?referral=PM. 
  2. "[IRFCA] A Study of Major Accidents on IR in 2004-2005". www.irfca.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
  3. https://erail.in/train-enquiry/16093. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. https://indiarailinfo.com/train/-train-lucknow-jn-mgr-chennai-central-gomtisagar-express-16094/309/906/35. {{cite web}}: Missing or empty |title= (help)