கோயமுத்தூர் மண்டலம்
கோயம்புத்தூர் மண்டலம் (Coimbatore region) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் மண்டலங்களில் ஒன்று.[1] தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஐந்து மண்டலங்களுள் இதுவும் ஒன்று. முதலில் தொடங்கப்பட்டப் பிற நான்கு மண்டலங்கள்: செங்கற்பட்டு மண்டலம், திருவண்ணாமலை மண்டலம், மதுரை மண்டலம், தஞ்சாவூர் மண்டலம். பின்னர் கோயம்புத்தூர் மற்றும் திருவண்ணாமலை மண்டலங்களிலிருந்து, சேலம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்த மண்டலத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் மண்டல அலுவலகங்கள் இயங்கிவருகின்றன. அவற்றின் தலைமையகங்கள் கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ளன. கோயமுத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களானது தமிழ்நாடு அரசின் வெவ்வேறு துறைகளிலும் அவற்றின் தேவைக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் உள்ளன.
உள்ளடக்கிய மாவட்டங்கள்
தொகுபொதுப்பணித்துறை
தொகுதமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மண்டலத்தை சீரமைத்து 2021, ஆகத்து 27 அன்று கோயமுத்தூர் பொதுப்பணித் துறை மண்டலம் உருவாக்கப்பட்டது. அதில் அடங்கியுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு.[2][3]
- ஈரோடு மாவட்டம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- சேலம் மாவட்டம்
- தருமபுரி மாவட்டம்
- திருப்பூர் மாவட்டம்
- நாமக்கல் மாவட்டம்
- நீலகிரி மாவட்டம்
தொழிலாளர் நலத்துறை
தொகுதொழிலாளர் நலத்துறையின் கோயமுத்தூர் மண்டலத்தில் பின் வரும் ஐந்து மாவட்டங்கள் உள்ளன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோயம்புத்தூர் மண்டலம் - Science Awareness Movement". www.ssivaa.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ மின்னம்பலம். "உதயமாகிறது கோவை மண்டலம்!". மின்னம்பலம். Archived from the original on 2022-01-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ "DET". www.skilltraining.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.