கோரா காய் (இனிப்பு பண்டம்)

பாரம்பரிய ஒடியா இனிப்பு பண்டமாகும்

கோரா காய் ஒரு பாரம்பரிய ஒடியா இனிப்பு பண்டமாகும், ஒடிசா மாநிலத்தில் கிடைக்கும் இனிப்பு வகைகளில் கோரா காய் மிகவும் பிரபலமானது. முக்கியமாக கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் இது ஒரு பொதுவான உணவாகும். யாத்ரீகர்கள் கோரா காயை லிங்கராஜப் பெருமானுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள். [1] . இது இனிப்பு சுவையேற்றிய அரிசிப் பொரியின் வடிவமாகும்.காய் (ஒடியா: ଖଇ) (பொரி) and Ukhuda (ஒடியா: ଉଖୁଡ଼ା)[2] என்றும் மேற்கு ஒடிசாவில் லியா(ஒடியா: ଲିଆ) [3] என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

கோரா காய்
புவனேஸ்வர் நகரில் கோரா காய்
மாற்றுப் பெயர்கள்முவான்
தொடங்கிய இடம் இந்தியா
பகுதிபுவனேஸ்வர், ஒடிசா
பரிமாறப்படும் வெப்பநிலைபிரசாதமாக
முக்கிய சேர்பொருட்கள்பொரி, வெல்லம், தேங்காய், ஏலக்காய்

கட்டாக் 'தாஹி பாரா'வுக்கும் , கேந்த்ராபரா 'ராசபலி'க்கும், நிமாபரா 'செனா ஜிலி'க்கும் பெயர் பெற்றதுபோல, கோவில் நகரமான புவனேஸ்வர் இந்த கோரா காய் இனிப்புக்கு க்கு பிரபலமானது ஆகும்.

தேவையான பொருட்கள் தொகு

தயாரிப்பு தொகு

இனிப்புபாகு  :

தண்ணீரில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து 10-15 நிமிடங்கள் மிதமான சூட்டில் உருக்கவும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் துண்டுகள், ஏலக்காய் , முந்திரி  மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்கவும். சுவையான இனிப்புபாகு தயாரானதும் முதல்கட்ட தயாரிப்பு முடிவடைந்தது.

கோரா தயாரித்தல் :

கேரமல் செய்யப்பட்ட கரைசலில் பஃப் செய்யப்பட்ட அரிசியைச் சேர்த்து, முவானுக்கு உருண்டைகளை உருவாக்கவும் அல்லது கைக்காக துண்டுகளாக வெட்டவும்.இனிப்புபாகு கரைசலில் அரிசிப் பொரியைச் சேர்த்து, உருண்டைகளாகவோ, துண்டுகளாகவோ நமக்கு ஏற்றபடி செய்யலாம். உருண்டைகளாக செய்தால் முவான் என்றும்  துண்டுகளாக செய்தால் காய் என்றும் அழைக்கப்படும். சுவையான கோரா காய் பண்டம் தயார். பொதுவாக இந்த இனிப்பு சாப்பிட சற்றே கடினமாகவும், சவ்வு தன்மை கொண்டதாகவும் காணப்படும்

மேலும் பார்க்க தொகு

  • சேனா போடா
  • ராசபாலி
  • ரசகொல்ல
  • சேன கஜா
  • கீர்சாகர்
  • சேனா கீரி
  • சேனா ஜலேபி
  • இந்திய இனிப்புகள் மற்றும் இனிப்புகளின் பட்டியல்
  • ஒரியா உணவு வகைகள்

மேற்கோள்கள் தொகு

  1. "LORD LINGARAJA, OFFERINGS". Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-15.
  2. Jena, B. B. (1980). Orissa, people, culture, and polity. Kalyani Publishers, Original from the University of Michigan. https://books.google.com/books?id=4zNuAAAAMAAJ&q=lia+ukhuda+orissa. 
  3. Das, Patnaik, Raicharan, Dhirendranath (1982). Festivals of Orissa. Orissa Sahitya Akademi. பக். 80. https://books.google.com/books?id=a9PQAAAAMAAJ&q=lia+ukhuda+orissa.