கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
(கோறளைப் பற்று பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (வாழைச்சேனை) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பிரென்துறைச்சேனை,
- செம்மானோடை,
- சுங்கான்கேணி,
- கல்குடா,
- கல்மடு,
- கண்ணகிபுரம்,
- கறுவாக்கேணி,
- கிண்ணையடி,
- கிரான்,
- கோரக்கள்ளிமடு,
- கோரவெளி,
- குடும்பிமலை,
- கும்புறுமூலை,
- மாவடிச்சேனை
- மீராவோடை
- முறக்கொட்டாஞ்சேனை
- முறுத்தனை
- நசிவந்தீவு
- பாலையடித்தோணா
- பேரில்லாவெளி
- பேத்தாலை
- பூலாக்காடு
- புதுக்குடியிருப்பு
- சந்திவெளி
- தேவபுரம்
- திகிலாவட்டை
- வாழைச்சேனை
ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவும்; வடக்கில் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவும், பொலநறுவை மாவட்டமும்; கிழக்கில் இந்தியப் பெருங்கடலும், எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].