கௌரி அயூப் (Gauri Ayyub1931- 1998) கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார்.இவர் தத்துவஞானியும் இலக்கிய விமர்சகருமான அபு சயீத் அயூப்பை மணந்தார்[1] (1906-1982), கௌரி ஒரு எழுத்தாளராக இருந்தார், மேலும் இவரது சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த ஏராளமான கட்டுரைகளுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். வங்காளத்தில் வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்புவதில் தனது பங்கிற்காக இவர் அங்கீகரிக்கப்படுகிறார்,1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போர் மற்றும் பிரகடனத்தின் போது மனித உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு எதிராக, 1974 இல் இந்தியாவில் அவசரநிலை ஆகியவற்றிற்கு எதிராக தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவர் எழுத்தாளர் மற்றும் சமூக சேவகருக்கு உதவுவதற்காக மைத்ரேயி தேவி, கெழகர் என்பதனை நிறுவ உதவியாக இருந்தார்.[2] ஆரம்பத்தில் 1971 போரின் போது ஆதரவற்ற வங்களாதேச குழந்தைகளுக்கு ஒரு தங்குமிடமாக. மைத்ரேயி தேவி அதனை நிறுவினார்.[3] 1990 ஆம் ஆண்டில் தேவி இறந்த பிறகு அந்த அமைப்பினை நடத்தி வந்தார்.

கௌரிஅயூப் சாந்திநிகேதன் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் தத்துவத்தையும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டமும் பயின்றார். 1963-91 இல், இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரியான ஸ்ரீ சிக்சியாதன் கல்லூரியில் பேராசிரியராகவும் பின்னர் துறைத் தலைவராகவும் இருந்தார்.

சுயசரிதை தொகு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கௌரி தத்தா 13 பிப்ரவரி 1931 அன்று பாட்னாவில் பிறந்தார். இவரது தந்தை, பேராசிரியர் தீரேந்திர மோகன் தத்தா, ஒரு தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரது தாயார் நிருபமா தத்தா, தொழில் முனைவோர் ஆவார். கௌரிக்கு நான்கு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். இவரது குடும்பம் முன்னாள் கிழக்கு பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தது மற்றும் அவ்வப்போது பாட்னாவிலிருந்து மைமென்சிங்கிற்கு (இப்போது பங்களாதேசில் ) பயணம் மேற்கொண்டார். இவருடைய காந்திய சிந்தனை கொண்ட தந்தை ஒரு சிக்கனமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தார், அது இவரது வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. [4]

கல்வி தொகு

கௌரி பங்கிபூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். 1947 இல் மாநில அளவிலான இறுதித் தேர்வில் பெண்களில் முதலிடம் பிடித்தார். மகத் மகிளா கல்லூரியில் இரண்டு வருட இடைநிலைக் கல்விக்குப் பிறகு, [5] இவர் பாட்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இங்கு இருந்தபோது, ஏகாதிபத்திய எதிர்ப்பு மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக இவர் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் கழித்த இரண்டு இரவுகள் இவளது எதிர்கால வாழ்க்கையை வடிவமைத்தது, ஏனெனில் இவருடைய தந்தை 1950 இல் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு இவரை அழைத்துச் சென்றார். அங்கு, தத்துவத்தில் (1952) இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இந்த காலகட்டத்தில், இவர் தனது ஆசிரியரும் 25 வயது மூத்தவருமான அபு சயீத் அயூப்பை காதலித்தார். [4] இவர் 1953 இல் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றார் மற்றும் 1955 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் சாந்திநிகேதனில் தங்கியிருந்தபோது, இவர் ஓர் இலக்கிய விழாவை ஏற்பாடு செய்தார் [6] நேமை சட்டோபாத்யாயுடன் [7], இணைந்து அதனை ஏற்பாடு செய்தார். இந்த மூன்று நாள் திருவிழா 21 பிப்ரவரி 1953 இல் தொடங்கியது, அந்த நிகழ்வு வங்காளதேச எழுத்தாளர்கள் மற்றும் வங்காளதேசம் (அப்போது கிழக்கு பாகிஸ்தான்) மற்றும் மேற்கு வங்காளத்தின் கவிஞர்களை ஒன்றிணைத்தது. மிக முக்கியமாக, பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருது திணிக்கப்படுவதற்கு டாக்காவில் எதிர்ப்பு பல வங்காள மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்தது.

சான்றுகள் தொகு

  1. Banglapedia: National Encyclopedia of Bangladesh. 
  2. "Khelaghar". Archived from the original on 2 June 2013. பார்க்கப்பட்ட நாள் 17 June 2013.
  3. Winter, Joe (2013) Calcutta Song, Peridot Press, pp 150–151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978 1 908095 70 1
  4. 4.0 4.1 Chaudhuri, Amitabha Gauri amader jiboner anyatamo pradhan bismay (Amazing Gauri) in Ed: Nahar, Miratun (2001). Kritajnatar Ashrubindu (Gauri Ayyub: A Memorial Volume), p. 22. Dey's Publishing, Kolkata. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7612-750-7.
  5. Magadh Mahila College
  6. Ghosh, Shankha (1998) Atmabishvas e sahaj, Chaturanga Vol. 58 No. 2, pp. 164–5
  7. Nemai Chattopadhyay
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_அயூப்&oldid=3717485" இலிருந்து மீள்விக்கப்பட்டது