சகாயத்ரியா சாலக்குடியன்சிசு
சகாயத்ரியா சாலக்குடியன்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பகாரிடே
|
பேரினம்: | சகாயத்ரியா
|
இனம்: | ச. சாலக்குடியன்சிசு
|
இருசொற் பெயரீடு | |
சகாயத்ரியா சாலக்குடியன்சிசு (மேனன், ரெமா தேவி & தோபியாசு, 1999) | |
வேறு பெயர்கள் | |
|
சகாயத்ரியா சாலக்குடியன்சிசு (Sahyadria chalakkudiensis) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாலக்குடி ஆற்றில் காணப்படும் ஒரு சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது ஆறுகளின் தாவரங்கள் அதிகமாகக் காணப்படும் மேல் பகுதிகளில் காணப்படுகிறது.[2] இந்தச் சிற்றினம் 12.5 சென்டிமீட்டர் (4.9 இன்ச்) நீளம் வரை உடல் நீளத்தை அடையலாம்.[2] இது இதன் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட ச. டெனிசோனி சிற்றினத்தினை ஒத்திருக்கிறது. ஆனால் ச. சாலக்குடியன்சிசு நிறங்கள் அடர்த்தி குறைவானவை.
இந்த மீன் இதன் பிரகாசமான வண்ண பட்டை மற்றும் பளபளப்பான செதில்கள் காரணமாக ச. டெனிசோனியுடன் இணைந்து கேரளா அழகி என்று அழைக்கப்படுகிறது.[3] பன்னாட்டுச் செல்லப்பிராணி வர்த்தகம், வாழிட மாற்றம், மீன்வளம் மற்றும் ஆக்கிரமிப்பு மீன் ஆகியவற்றால் இது ஆபத்தில் உள்ளது. முதுகெலும்பு-துடுப்பில் ஒரு கருப்பு குறி இருப்பது இந்தச் சிற்றினத்தை ச. டெனிசோனியினை அடையாளம் காட்டுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Raghavan, R.; Ali, A. (2015). "Sahyadria chalakkudiensis". IUCN Red List of Threatened Species 2015: e.T172312A70170251. doi:10.2305/IUCN.UK.2015-1.RLTS.T172312A70170251.en. https://www.iucnredlist.org/species/172312/70170251. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ 2.0 2.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2024). "Dawkinsia chalakkudiensis" in FishBase. July 2024 version.
- ↑ "ഈ കുഞ്ഞൻ മീനിന് മിസ് കേരള എന്ന പേര് നൽകിയത് ഒരു വനിതയാണ്, ആരാണവർ?". ManoramaOnline (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ "Sahyadria chalakkudiensis (Puntius chalakkudiensis) — Seriously Fish". பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.