சங்கீதா ஈசுவரன்
சங்கீதா ஈசுவரன் (Sangeeta Isvaran) ஓர் இந்தியப் பரதநாட்டிய நடனக் கலைஞர், ஆராய்ச்சி அறிஞர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இளம் நடனக் கலைஞர்களுக்கான தேசிய விருதான உசுதாத் பிசுமில்லா கான் யுவ புரஸ்கார் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1][2]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஈசுவரன் இந்தியாவின் சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.[3] இவர் ஐந்து வயதிலிருந்தே பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி பெற்றார்.[1] கலாநிதி நாராயணன் நிறுவிய நடனப் பள்ளியான அபியான சுதாவின் முதல் மாணவர்களில் ஒருவரானார்.[4] நிருத்யா, அபிநயா, களரிப்பயிற்று, குச்சிப்புடி, கர்நாடக இசை, நட்டுவாங்கம் போன்ற நுண்கலைகளிலும் பயிற்சி பெற்றவர்.[1]
தொழில்
தொகுஈசுவரன் கட்ராடி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.[5] மேலும் மோதல் தீர்வு, கல்வியை வழங்குதல் மற்றும் விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நுண்கலைகளைப் பயன்படுத்தும் கத்ராடி முறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கவர்.[2][6] ஈசுவரன் துசுபிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள், தெருவோர குழந்தைகள், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வணிக பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களுடன் சமூக சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் முயற்சியில் நடனம் மற்றும் நாடகத்தைப் பயன்படுத்தி பணியாற்றியுள்ளார்.[1][6] அமெரிக்க நிதி ஆய்வாளராக மாறிய சமூக சேவகியான லிஸ் ஹெய்னஸுடன் இணைந்து கட்ராடியை செயல்படுத்தி வருகின்றார்.[7] இவர் விண்ட் நடனக்கலைஞர் அறக்கட்டளையை நிறுவினார். இது குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்காக நாட்டுப்புறக் கலைகளைப் பயன்படுத்துகிறது.[8] இவர் கூத்து கலைஞர் திலகவதியுடன் இணைந்து பணியாற்றினார்.[3]
ஈசுவரன் தனது திட்டங்களில் சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு தளங்களுடன் இணைந்து செயல்படுகிறார். இதன் காரணமாக இவர் ஒரு "சிந்தனை நடனக் கலைஞர்" என்று வர்ணிக்கப்படுகிறார். அழகியல் கவர்ச்சியின் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் பாரம்பரிய நடனத்தைக் கொண்டு வந்ததற்காகப் பெருமை பெற்றார்.[6] அமைதிக்காக இளைஞர்கள் என்ற ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவன முன்முயற்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், மெக்சிகோ, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார். மாற்றுத்திறனாளி பன்னாடு, உலகப் பார்வை மற்றும் ஆக்சுபாம் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளார்.[1][6] இவர் தேஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடையவர். எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த பணிபுரிந்தார்.[6] மேலும் இந்தியாவில் கோவிட்-19 இடம்பெயர்வு நெருக்கடியின் போது சென்னை புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவில் தன்னார்வலராக இருந்தார்.[5][9]
இவர் 2008ஆம் ஆண்டு முதல் இந்தியக் கலாச்சார உறவுகளுக்கான குழுவின் ஆய்வு நிதி மற்றும் ஆசிய அறக்கட்டளையின் ஆய்வு நிதியினையும் பெற்றுள்ளார்.[6][10] இதற்காக அவர் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா மற்றும் இந்தோனேசியாவில் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகப் பட்டறைகளை நடத்தியுள்ளார்.[1][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 . 30 November 2011.Sivashankar, Nithya (30 November 2011). "Making a song and dance of it". The Hindu. ISSN 0971-751X. Retrieved 30 December 2020.
- ↑ 2.0 2.1 "Sangeeta Isvaran". Nature Conservation Foundation. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
- ↑ 3.0 3.1 . 21 March 2019.
- ↑ . 30 May 2013.
- ↑ 5.0 5.1 Shekar, Anjana (30 May 2020). "In Chennai, migrant crisis made more difficult with the language barrier". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 Vijay, Hema (21 January 2012). "With society as stage". டெக்கன் ஹெரால்டு (in ஆங்கிலம்). Archived from the original on 31 December 2020.
- ↑ Shivram, Praveena (23 March 2019). "Disc dance revolution with Bharatanatyam and Ultimate Frisbee" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/society/disc-dance-revolution/article26606678.ece.
- ↑ Subramanian, Lakshmi (6 December 2015). "Touch and feel". The Week. பார்க்கப்பட்ட நாள் 1 January 2021.
- ↑ Ashok, Sowmiya (2 June 2020). "No space on trains, no rented homes to go back to: From Chennai to Gurugram, workers left in limbo". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ "Sangeeta Isvaran". Indian Council for Cultural Relations. பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.