சசிகலா குருபூர்

சசிகலா குருபூர் (Shashikala Gurpur) (பிறப்பு: டிசம்பர் 11, 1964) கருநாடகாவின் மங்களூரிலுள்ள குருபூரைச் சேர்ந்த இவர் இந்திய எழுத்தாளரும் மற்றும் பேராசிரியையும் ஆவார். இவர் புனேவிலுள்ள சிம்பியோசிசு பன்னாட்டு (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சட்டப் பீடத்தின் தலைவர் மற்றும் சிம்பியோசிசு சட்டப் பள்ளியின் இயக்குநரும் ஆவார். இவர் இந்திய சட்ட ஆணையம்[2] மற்றும் தேசியக் கல்விக் குழுவில் உறுப்பினரும் ஆவார்.[3] இவர் புல்பிரைட் உதவித் தொகையைப் பெற்றவர். மே 2016-இல் அமெரிக்க தரவு பகுப்பாய்வு நிறுவனமான லெக்சிஸ்நெக்சிஸின் (LexisNexis) இந்தியாவின் சிறந்த 100 சட்டப் பேரறிஞர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.[4] இவருக்கு மார்ச் 2019-இல் கர்நாடக அரசால் கித்தூர், ராணி சென்னம்மா விருது வழங்கப்பட்டது.[5]

சசிகலா குருபூர்
பிறப்பு11 திசம்பர் 1964 (1964-12-11) (அகவை 60)[1]
மங்களூர், இந்தியா[1]
தேசியம் இந்தியா
கல்விஇளங்கலை அறிவியல், இளங்கலை சட்டம், முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்மங்களூர் பல்கலைக்கழகம்
பணிபேராசிரியர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர்
பட்டம்சிம்பியோசிசு பன்னாட்டுச் சட்டப் பீடத்தின் தலைவர் & சிம்பியோசிசு சட்டப் பள்ளியின் இயக்குநர்
விருதுகள்கித்தூர் ராணி சென்னம்மா விருது, 2019
SILF's Legal Education Innovation Award, 2011
வலைத்தளம்
drshashikalagurpur.com

கல்வி

தொகு

சசிகலா குருபூர் 1988ஆம் ஆண்டில் மங்களூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். மைசூர் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுச் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தங்கப் பதக்கமும் பெற்றார். இவர் புனித ஆக்னெசு கல்லூரி மற்றும் எஸ். டி. எம் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

சசிகலா குருபூர், இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, எஸ். டி. எம் சட்டக் கல்லூரி, மணிப்பால் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் அயர்லாந்தின் கார்க் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றில் பணிபுரிந்துள்ளார். இவரது ஆராய்ச்சி நீதித்துறை, ஊடக சட்டங்கள், பன்னாட்டுச் சட்டம் மற்றும் மனித உரிமைகள், ஆராய்ச்சி முறை, பெண்ணிய சட்ட ஆய்வுகள், உயிரி தொழில்நுட்ப சட்டம், சட்டம் மற்றும் சமூக மாற்றம் ஆகிய துறைகளில் அடங்கும். இவர் இரண்டு புத்தகங்களை இணைந்து எழுதியுள்ளார். மேலும், 60 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.[6]

1991ஆம் ஆண்டில், இந்திய தேசிய சட்டப் பள்ளி சமூக அடிப்படையிலான சட்ட சீர்திருத்தங்கள் குறித்த தேசிய விருது பெற்ற திட்டத்திற்கு வழிகாட்டினார். 2001ஆம் ஆண்டில், போர்டு அறக்கட்டளை பாலின வாதம் மற்றும் ஐரோப்பிய ஆணைய சட்ட இணைப்பு மானியத்தின் கீழ் 1998ஆம் ஆண்டில் என். பி. எஸ் துறை ஆராய்ச்சி நிதியினைப் பெற்றார்.

முனைவர் சசிகலா குருபூர் சமீபத்தில் புனேவைத் தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான உட்சாலோவின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[7]

கௌரவங்கள்

தொகு
  • 2004இல் புல்பிரைட் உதவித் தொகையையும் மற்றும் எடின்பர்க் சட்டப் பள்ளியின் உதவித் தொகையையும் பெற்றார்.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்விக்கு இவர் செய்த பங்களிப்பிற்காக கர்நாடக அரசு கித்தூர் ராணி சென்னம்மா விருதை வழங்கியது.[5]
  • 2014ஆம் ஆண்டில், சசிகலாவிற்கு பெங்களூரின் இந்திய மேலாண்மை கழகத்துடன் இணைந்து ஜெனீவாவின் உலகளாவிய நெறிமுறை மன்றத்தால் 'சமத்துவத்திற்கான எனது தேர்வு' என்ற அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.[8]
  • நவம்பர் 2013-இல், விஜய் அறக்கட்டளையால் 'சட்டத் துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது' வழங்கப்பட்டது.[9]
  • 2011ஆம் ஆண்டில் இந்தியச் சட்ட நிறுவனங்களின் அமைப்பு மற்றும் மேனன் சட்டப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றால் சட்டக் கல்வி கண்டுபிடிப்பு விருதைப் பெற்றார்.[1][10]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Symbiosis Director Dr Shashikala Gurpur Wins Legal Education Award". Daijiworld Media. 9 September 2011. https://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=114398. 
  2. Pinto, Stanley (4 September 2011). "Legal Education Innovation Award – 2011". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/Mangalorean-Shashikala-Gurupur-who-is-a-member-of-Law-Commission-of-India-and-the-director-of-Symbiosis-Law-School-Pune-has-bagged-the-prestigious-and-the-first-ever-Legal-Education-Innovation-Award-2011-instituted-by-the-Society-of-Indian-Law-Firms-SILF-and-the-Menon-Institute-of-Legal-Advocacy-Training-/articleshow/9857984.cms. 
  3. "Members of General Body, National Judicial Academy India" இம் மூலத்தில் இருந்து 2021-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210918205348/http://www.nja.nic.in/members-of-nja-governing-bodies.html. 
  4. "M'lurean among '100 Legal Luminaries of India'". டெக்கன் ஹெரால்டு. 8 August 2016. https://www.deccanherald.com/content/563127/mlurean-among-100-legal-luminaries.html. 
  5. 5.0 5.1 "Dr Shashikala Gurpur conferred with Kittur Rani Chennamma Award". 8 March 2019. https://www.newskarnataka.com/mangalore/dr-shashikala-gurpur-conferred-with-kittur-rani-chennamma-award. 
  6. Khatri, Aastha (9 March 2019). "Dr Shashikala Gurpur, Director of SLS- Pune Receives Annual Kittur Rani Chennamma Award 2018–19". Amielegal இம் மூலத்தில் இருந்து 13 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191213153203/https://amielegal.com/dr-shashikala-gurpur-receives-annual-kittur-rani-chennamma-award/. 
  7. "UdChalo strengthens advisory board with the appointment of three new members". 9 December 2021. Archived from the original on 7 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "Dr. Shashikala Gurpur awarded a certificate of recognition – 'My Choice for Equality' Symbiosis Law School, Pune". LawyersClubIndia.com. 15 January 2014. https://www.lawyersclubindia.com/news/Dr-Shashikala-Gurpur-awarded-a-certificate-of-recognition-My-Choice-for-Equality--14652.asp. 
  9. "Shashikala Gurpur bags another natl award". 13 November 2013. https://www.deccanherald.com/content/368821/shashikala-gurpur-bags-another-natl.html. 
  10. "Conversation with Symbiosis Dean Shashikala Gurpur on receiving first Legal Education Innovation Award". Bar & Bench. 9 September 2011. https://barandbench.com/conversation-symbiosis-dean-shashikala-gurpur-receiving-first-legal-education-innovation/.  (subscription required)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகலா_குருபூர்&oldid=4169424" இலிருந்து மீள்விக்கப்பட்டது