சசிகலா (பாலிவுட் நடிகை)
சசிகலா சைகல் ( Shashikala Saigal) (4 ஆகஸ்ட் 1932-4 ஏப்ரல் 2021) சசிகலா என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1940 களில் தொடங்கி நூற்றுக்கணக்கான பாலிவுட் படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[1][2]
சசிகலா | |
---|---|
பிறப்பு | சசிகலா ஜவால்கர் 4 ஆகத்து 1932 சோலாப்பூர், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 4 ஏப்ரல் 2021 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 88)
மற்ற பெயர்கள் | சசிகலா சைகல் |
செயற்பாட்டுக் காலம் | 1944–2006 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆர்த்தி (1962) கும்ரா (1963) |
வாழ்க்கைத் துணை | ஓம் பிரகாஷ் சைகல் |
விருதுகள் |
|
புகழ்ப்பட்டம் | பத்மசிறீ (2007) |
ஆரம்ப ஆண்டுகள்
தொகுமகாராட்டிராவின் சோலாப்பூரில் மராத்தி பேசும் இந்து பாவ்சர் சிம்பி குடும்பத்தில் சசிகலா பிறந்தார்.[3] 5 வயதிலேயே, சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பல நகரங்களில் இவர் நடனமாடி, பாடி, மேடையில் நடித்து வந்தார். சசிகலாவின் சிறுவயதிலேயே குடும்பத்தின் பொருளாதார நிலைமை மோசமானதால் இவரது தந்தை தனது குடும்பத்தை போது மும்பைக்கு அழைத்து வந்தார். சசிகலாவின் தோற்றமும் திறமையும் கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினர். பாடகி மற்றும் நடிகையுமான நூர்ஜஹானைச் சந்திக்கும் வரை குடும்பம் சிறிய அளவிலேயே வருமானம் ஈட்டியது.
நடிகையாக அங்கீகாரம்
தொகுநூர்ஜஹானின் கணவர் சௌத் உசேன் ரிசிவி அப்போது ஜீனத் என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். படத்தில் இடம்பெற்ற கவ்வாலி வகை பாடல் காட்சியில் சசிகலாவையும் சேர்த்தார்.[4] 1947 ஆம் ஆண்டு வெளியான ஜுக்னு படத்தில் நூர்ஜஹான் மற்றும் திலீப் குமாருடன் சசிகலா ஒரு துணை வேடத்தில் நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான அர்சூ படத்தில் மீண்டும் அவருடன் நடித்தார்.
சசிகலா, சம்மி கபூருடன் தாகு (1955) என்ற படத்தில் பணியாற்றினார்.[5] மேலும், பி. என். அரோரா, அமியா சக்ரவர்த்தி மற்றும் ஒரு சில தயாரிப்பாளர்கள் தயாரித்த திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பிரேம் நாராயண் அரோரா தயாரித்த இந்தித் திரைப்படமான புக்டி (1948) படத்தில் நடித்ததன் மூலம் இவர் அனைவரது கவனத்தையும் பெற்றார். வி. சாந்தாராமின் தீன் பட்டி சார் ராஸ்தா (1953) போன்ற சில திரைப்படங்களில் இவருக்கு பாத்திரங்கள் கிடைத்தன.[6] தனது இருபதுகளின் முற்பகுதியில் இருந்தபோது, சசிகலா குந்தன் லால் சைகல் குடும்பத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் சைகலை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[7]
விருது
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran actor Shashikala dies at 88". தி எகனாமிக் டைம்ஸ். 4 April 2021. பார்க்கப்பட்ட நாள் 4 April 2021.
- ↑ "Shashikala, who shone in shades of gray, dead". Avijit Ghosh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 April 2021. பார்க்கப்பட்ட நாள் 5 April 2021.
- ↑ "Veteran actor Shashikala Om Prakash Saigal passes away". The Indian Express (in ஆங்கிலம்). 2021-04-04. பார்க்கப்பட்ட நாள் 2021-04-05.
- ↑ "Zeenat (1945)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ "Daku (1955)". Indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ "Hindi Film Songs - Teen Batti Char Rasta (1953) | MySwar". myswar.co. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ Vimla Patil (7 March 1999). "Peace that surpasseth understanding". The Tribune. p. Sunday Reading.
- ↑ "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.
- ↑ "Turn it up, folks - DNA". Dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 24 June 2015.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சசிகலா
- பாலிவுட் கங்காமா இணையதளத்தில் சசிகலா