சஞ்சய் மல்கோத்ரா
சஞ்சய் மல்கோத்ரா (Sanjay Malhotra) (பிறப்பு - பிப்ரவரி 14, 1968) 1990 ஆம் ஆண்டு இராசத்தான் பிரிவு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். தற்போது, இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் செயலாளராக உள்ளார். தனது முந்தைய பணியில், இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் நிதிச் சேவைகள் துறையில் செயலாளர் பதவியை வகித்தார்.[2]முன்னதாக, இவர் ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், மின்சார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். இதற்கு முன்பு, இராசத்தான் அரசில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
சஞ்சய் மல்கோத்ரா | |
---|---|
இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது கவர்னர் | |
பதவியில் 11 திசம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
Succeeding | சக்திகாந்த தாஸ் |
இந்திய அரசின் வருவாய்த் துறை செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 திசம்பர் 2022 | |
நியமிப்பு | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முன்னையவர் | தருண் பஜாஜ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 பெப்ரவரி 1968[1] பிகானேர், இராசத்தான், இந்தியா |
முன்னாள் கல்லூரி | இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் (தொழில்நுட்பவியல் இளையர்) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அரசுக் கொள்கையியலில் முதுகலைப் பட்டம்) |
வேலை | இந்திய ஆட்சிப் பணி அலுவலர் |
தொழில் | குடிமைப்பணி |
இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். [3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Civil List of IAS Officers". dtf.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
- ↑ The Bureau, The Hindu (2024-12-09). "Who is Sanjay Malhotra, the next RBI chief?" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/business/Economy/who-is-sanjay-malhotra-new-rbi-governor/article68965257.ece.
- ↑ "'Calm influence': Revenue Secretary Sanjay Malhotra next RBI Governor". The Indian Express (in ஆங்கிலம்). 2024-12-09. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.
- ↑ "Sanjay Malhotra: कौन हैं RBI के नए गवर्नर संजय मल्होत्रा, जो शक्तिकांत दास की लेंगे जगह - Sanjay Malhotra: Who is RBI's new governor Sanjay Malhotra, who will replace Shaktikanta Das". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.