சண்டிகர் பொறியியல் கல்லூரி

சண்டிகர் பொறியியல் கல்லூரி (Chandigarh Engineering College, CEC) சண்டிகரை அடுத்த மொகாலியில் லான்டரன் பகுதியில் உள்ள சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும். இது தனது பட்டக் கல்வித் திட்டங்களுக்கு பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது [1] சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் லான்டரன் வளாகம் திறக்கப்பட்ட பிறகு ஓராண்டிலேயே இக்கல்லூரி 2002இல் நிறுவப்பட்டது. பஞ்சாபில் உள்ள மேலானப் பொறியியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது.

சண்டிகர் பொறியியல் கல்லூரி
வகைபொறியியல் கல்லூரி
உருவாக்கம்2002
தலைவர்சத்னம் சிங் சாந்து
பணிப்பாளர்முனைவர். பிராசாசீசு பட்னாய்க்
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கம்சிஜிசி
சேர்ப்புபஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.cecmohali.org

கட்டமைப்பு

தொகு

லான்டரன் வளாகத்தில் உள்ள ஒன்பது கல்லூரிகளில் சண்டிகர் பொறியியல் கல்லூரியும் ஒன்றாகும். இதுவே முதன்மையானக் கல்லூரியாகவும் விளங்குகின்றது. இக்கல்லூரி நான்கு கட்டிடத் தொகுதிகளில் இயங்குகின்றது.

ஏப்ரல் 26, 2004இல் இப்பொறியியல் கல்லூரிக்கு ISO 9001:2000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.[3]

பட்டப்படிப்புகள்

தொகு

இளநிலை தொழினுட்பம் (பிடெக்)

தொகு
  • கணினி அறிவியல் & பொறியியல்
  • தகவல் தொழினுட்பம்
  • மின்னணுப் பொறியியல் & தொலைத்தொடர்பு பொறியியல்
  • இயந்திரப் பொறியியல்

முதுநிலை தொழினுட்பம் (எம்டெக்)

தொகு
  • கணினி அறிவியல் & பொறியியல்
  • அமைப்பு மென்பொருள்
  • தகவல் தொழினுட்பம்
  • தகவல் பாதுகாப்பு
  • மின்னணுவியல் & தொலைத்தொடர்பு பொறியியல்
  • பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு
  • இயந்திரப் பொறியியல்

முதுநிலை பட்டமேற்படிப்புகள்

தொகு
  • வணிக நிர்வாக மேலாண்மை (எம்பிஏ)
  • கணினி பயன்பாட்டு மேற்படிப்பு (எம்சிஏ)

மேற்சான்றுகள்

தொகு
  1. Punjab Technical University. "Affiliated Colleges". ptu.ac.in. Archived from the original on 9 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  2. CGC. "Chandigarh Engineering College-About". www.cgc.edu.in. Archived from the original on 11 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2014.
  3. "CEC Landran gets ISO 9001 label". expressindia.com. 27 April 2004 இம் மூலத்தில் இருந்து 15 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5g2YpFHkF?url=http://cities.expressindia.com/fullstory.php?newsid=82898. பார்த்த நாள்: 14 April 2009. 

வெளி இணைப்புகள்

தொகு