சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி
அமைவிடம்
சண்டிலிப்பாய், இலங்கை
தகவல்
தொடக்கம்1929
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
கல்வி ஆணையம்இலங்கை கல்வி அமைச்சு
தரங்கள்1 முதல் 12 வரை

சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலை

தொகு

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலை என்னும் பெயருடன் இந்தப் பாடசாலையை நிறுவினார். அவரே இப்பாடசாலையின் அதிபராக 1940 வரையில் பணியாற்றினார்.

சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம்

தொகு

ஆங்கிலக் கல்விப் போதனைகளை மட்டும் வழங்கி வந்த இந்து ஆங்கிலப் பாடசாலை சண்டிலிப்பாய் பிரதேசத்தில் தமிழ் மொழிக் கல்வியையும் வழங்க வேண்டும் என்ற நோக்கோடு இப்பகுதியில் தமிழ் மொழிக் கல்வியை வழங்கி வந்த சண்டிலிப்பாய் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, சண்டிலிப்பாய் வாணி நிகேதன வித்தியாசாலை என்பன சண்டிலிப்பாய் இந்து ஆங்கிலப் பாடசாலையுடன் 1970 இல் இணைக்கப்பட்டு சண்டிலிப்பாய் இந்து மகா வித்தியாலயம் எனும் பெயர் மாற்றம் பெற்றது.

1995ம் ஆண்டில் ஆரம்பத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இப்பாடசாலை தரம் 1 - பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் 1264 மாணவர்களுடன் இயங்கிய இந்தப் பாடசாலை ஈழப்போர் காரணமாக இடப்பெயர்வு கண்டு கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் இயங்கி 1996 ஆம் ஆண்டில் மீண்டும் சண்டிலிப்பாயில் 40 மாணவர்களுடன் செயற்படத் தொடங்கியது.

இந்துக் கல்லூரி

தொகு

1999 ஆம் ஆண்டில் பாடசாலை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் தென்மராட்சி மக்கள் இடப்பெயர்வைக் கண்டபோது 500 வரையான மாணவர்களை இக்கல்லூரி உள்வாங்கியது.

விளையாட்டில் சாதனைகள்

தொகு
  • 1993 இல் இப்பாடசாலையின் வலைப் பந்தாட்ட அணி கோட்ட மட்டத்தில் சம்பியனாகி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றது.
  • 1998 இல் வலைப்பந்தாட்ட அணி மாகாண மட்டப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றது.
  • 2003 இல் வலைப்பாந்தாட்ட அணி மாகாணச் சம்பியன் ஆனது.

பாடசாலை அதிபர்கள்

தொகு
  • ப. மு. செகராசசிங்கம் (1929-1940)
  • தில்லையம்பலம் (1941-1951)
  • பி. சி. சுப்பிரமணியம் (1955-1965)
  • டபிள்யூ. பிச் (1966-1968)
  • எஸ். இராஜசுந்தரம் (1967-1970)
  • ப. சிவானந்தராஜா (1971-1978)
  • க. வைத்தியநாத ஐயர் (1979-1985)
  • செ. அமிர்தலிங்கம் (1985)
  • எஸ். எம். மூர்த்தி (1985-1986)
  • பரராஜசிங்கம் (1986-1987)
  • சோ. சோமசேகரம் (1988-1992)
  • ச. சிவனேஸ்வரன் (1993- )
  • கு. விமலன் (தற்போது)

உசாத்துணை

தொகு
  • சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, உதயன் பத்திரிகை, யாழ்ப்பாணம், 11 நவம்பர் 2011