சண்டிலிப்பாய்
சண்டிலிப்பாய் அல்லது சண்டிருப்பாய் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமப் பிரிவில், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் வடக்கு எல்லையில் பெரியவிளானும், கிழக்கு எல்லையில் மாசியப்பிட்டி, கந்தரோடை, சங்குவேலி ஆகிய ஊர்களும், தெற்கில் மானிப்பாயும், மேற்கில் சங்கானை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும் உள்ளன. இவ்வூர் சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய் மத்தி, சண்டிலிப்பாய் மேற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கோயில்கள்தொகு
- கல்வளைப் பிள்ளையார் கோயில் (நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய கல்வளையந்தாதி என்னும் நூலில் இத்தலம் பாடப்பெற்றது)
- சீரணி நாகபூசணி அம்மன் கோயில்
- சண்டிலிப்பாய் விசுவநாதீசுவரர் கோயில்
- சண்டிலிப்பாய் ஐயனார் கோயில்