சதாத் பூர் குச்ரன்
சதாத் பூர் குச்ரன்(Sadat Pur Gujran) இந்தியாவின் தில்லி நகரில் உள்ள வடகிழக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
சதாத் பூர் குச்ரன் Sadat Pur Extension | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | வடகிழக்கு |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 48,028 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]சியாவுத்தின் பூர் நகரின் மக்கள்தொகை 42,564 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 72% நபர்கள் ஆண்கள் மற்றும் 52% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 63% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 73% நபர்கள் ஆண்கள் மற்றும் 59% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில்20% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.
மாவட்டத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட பகுதிகளில் இந்நகரமும் ஒன்றாகும். எனினும், கழிவுநீர் காரணமாக சாலைப் போக்குவரத்து இரண்டு மூன்று ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பிரதான சாலை அகலப்படுத்துதல், தில்லி மெட்ரோ மற்றும் திறந்த பாலம் போன்ற வரவிருக்கும் திட்டங்களால் இந்த பகுதி மேலும் நல்ல வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. எழைகள் , பணக்காரர்கள் இருவரும் சேர்ந்த சமுதாயமாக சதாத் பூர் காணப்படுகிறது. சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலவாழ்வுச் சங்கங்கள் இங்கு செயற்படுகின்றன. சதாத் பூர் விரிவுப் பகுதி அதின நவீன வசதிகள் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு பல உடற்பயிற்சிக் கூடங்கள், தங்கும் விடுதிகள், பள்ளிகள் மற்றும் பண்ணை வீடுகள் முதலானவை உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.