சதுப்புநிலத் தவளை

சதுப்புநிலத் தவளை (marsh frog) என்பது பெலோபிலாக்ஸ் ரெடிபண்டஸ் என்ற சிற்றினத்தினைச் சார்ந்த ஐரோப்பா மற்றும் ஆசிய நீர் தவளையாகும். அவை ஐரோப்பாவின் பெரும் பகுதியில் மேற்கு பிரான்சில் தொடங்கி மத்திய கிழக்கிலும், உருசியாவின் ஓர் பகுதியிலும் காணப்படுகிறது.[3] சவூதி அரேபியா மற்றும் உருசியாவின் தூரக் கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்ட தவளைகள் வாழ்கின்றன. ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட தவளைகள் உள்ளன.[4] இந்த தவளைகள் அவற்றின் வாழ்விடங்களில் உள்ள பல்வேறு வகையான நீர்நிலைகளில் வாழக்கூடியவை. சதுப்புநிலத் தவளை அதன் வாழிட வரம்பில் காணப்படும் மிகப் பெரிய தவளை வகையாகும். ஆண் தவளைகள் 97.86 மிமீ (3.85 அங்குலம்) உடல் நீளமும், பெண் தவளையானது 102.36 மிமீ (4.03 அங்குலம்) நீளமும் உடையது.[5] தலைப்பிரட்டைகள் சுமார் 186 மிமீ (7.32 அங்குலம்) நீளமுடையது. ஆனால் இந்த வளர்ச்சியானது வழக்கமாக நீண்ட குளிர்காலம் உள்ள இடங்களில் நிகழ்கிறது. சதுப்புநில தவளைகள் குளிர்காலத்தில் தண்ணீருக்கு அடியில் அல்லது வளைகளில் குளிர்கால உறக்கம் மேற்கொள்கின்றன. இவை இனப்பெருக்கம் மேற்கொள்ளக் குளங்களைக் கண்டுபிடிக்கப் பூமியின் காந்தப்புலத்தைப் பயன்படுத்துகின்றன.[6] அடர் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு அல்லது சாம்பல் வரை, வெளிர் பச்சை கோடுகளுடன் மாறுபட்ட வண்ணங்களில் காணப்படும். தவளையின் பின்புறத்தில் ஒரு வெளிறிய கோடு பொதுவாகக் காணப்படும். வசந்த கால துவக்கத்தில் வெப்பத்தைத் திறமையாக உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அடர் நிறமாக இருக்கும்.

மனித கையுடன் ஒப்பிடும்போது பெண் தவளை.
சதுப்புநிலத் தவளை
பாதுகாப்பு நிலை


தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்  (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: நீர் நில வாழ்வன
வரிசை: தவளை
குடும்பம்: ரானிடே
பேரினம்: பெலோபிலாக்ஸ்
சிற்றினம்:
P. ரெடிபண்டஸ்
இருசொற் பெயரீடு
பெலோபிலாக்ஸ் ரெடிபண்டஸ்

(பாலாசு, 1771)
வேறு பெயர்கள்

ரானா ரிடிபண்டா பாலாசு, 1771[2]

சதுப்புநிலத் தவளை (பெலோபிலாக்ஸ் ரெடிபண்டஸ்) அழைப்பு பதிவு தாமதமாக மாலை பசில்டன், எஸ்செக்ஸ், இங்கிலாந்து

சதுப்புநிலத் தவளைகள் பெரிய அளவிலானத் தலையைக் கொண்டுள்ளன. இவை பலவகையான இரையைச் சாப்பிடக் கூடியவை. பெரும்பாலும் கணுக்காலிகள் மற்றும் பிற முதுகெலும்பில்லா உயிரிகளை உண்ணுகின்றன. 53 தவளைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இதன் இரையில் தெரேஸின், ஈரிறக்கையினம் 42,62% சதவிகிதமும் கோலியாப்பிடிரா 21,84% உள்ளதாகத் தெரிகின்றது.[7] இந்த தவளைகள் நீர் எருமை மீது காணப்படும். நீர் எருமைகளால் ஈர்க்கப்படும் ஈக்களைச் சாப்பிடுவது இதனால் எளிதாகிறது. இது பரஸ்பர உறவைச் சுட்டிக்காட்டுகிறது.[8] தலைப்பிரட்டைகள் ஆல்கா, மக்கும் பொருட்கள், அழுகும் தாவரங்கள், இறந்த விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கரிமப் பொருட்களைச் சாப்பிடுகின்றன.[3]

மனித கையில் தலைப்பிரட்டை.

கலப்பினமாக்கல்

தொகு

நன்கு அறியப்பட்ட கலப்பின சதுப்புநிலத் தவளைகள் மூன்றாகும்:

  • உண்ணக்கூடிய தவளை பெலோபிலாக்ஸ் கே.எல். எஸ்குலெண்டசு (பொதுவாக மரபணு வகை RL):
    குள தவளை பி. லோசோனே (எல்எல்) × பி. ரெடிபண்டஸ் (ஆர்ஆர்) [9] [10]
  • கிராஃபின் கலப்பின தவளை பெலோபிலாக்ஸ் கே.எல். கிராஃபி (பிஆர்):
    பெரெஸின் தவளை பி. பெரெஸி (பிபி) × பி. ரெடிபண்டஸ் (ஆர்ஆர்) அல்லது
    பெரெஸின் தவளை பி. பெரெஸி (பிபி) × உண்ணக்கூடிய தவளை பி. கே.எல். எஸ்குலெண்டசு (ஆர் ஈ)
    (எந்த கலப்பு முதன்மை கலப்பினமாக்கல் என்பது தெளிவாக இல்லை)
  • இத்தாலிய உண்ணக்கூடிய தவளை பெலோபிலாக்ஸ் கே.எல். ஹிஸ்பானிகஸ் (ஆர் பி):
    இத்தாலிய குளத் தவளை பி. பெர்கேரி (பிபி) × பி. ரெடிபண்டஸ் (ஆர்ஆர்)

சதுப்புநிலத் தவளையின் எண்ணிக்கையானது பிற கலப்பினமாதலிலிருந்து பராமரிக்கப்படுகிறது.[10] சதுப்புநிலத் தவளை அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில், அங்குள்ள பூர்வீக தவளையான பெலோபிலாக்சுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. கலப்பினமாதல் நிகழ்ந்துள்ள போதிலும் அங்குள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பெரிதும் பாதிப்பும் இல்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன.[4] [11]

மேற்கோள்கள்

தொகு
  1. Kuzmin, Sergius; Tarkhnishvili, David; Ishchenko, Vladimir; Dujsebayeva, Tatjana; Tuniyev, Boris; Papenfuss, Theodore; Beebee, Trevor; Ugurtas, Ismail H.; Sparreboom, Max; Rastegar-Pouyani, Nasrullah; Disi, Ahmad Mohammed Mousa; Anderson, Steven; Denoël, Mathieu; Andreone, Franco (2009). "Pelophylax ridibundus". IUCN Red List of Threatened Species. 2009: e.T58705A11825745. doi:10.2305/IUCN.UK.2009.RLTS.T58705A11825745.en.
  2. Frost, Darrel R. (2013). "Pelophylax ridibundus (Pallas, 1771)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 24 July 2013.
  3. 3.0 3.1 "Pelophylax ridibundus Marsh Frog". AmphibiaWeb.
  4. 4.0 4.1 Leuenberger, Julien; Gander, Antoine; Schmidt, Benedikt R.; Perrin, Nicolas (20 February 2014). "Are invasive marsh frogs (Pelophylax ridibundus) replacing the native P. lessonae/P. esculentus hybridogenetic complex in Western Europe? Genetic evidence from a field study". Conservation Genetics 15 (4): 869–878. doi:10.1007/s10592-014-0585-0. 
  5. Erismis, Ugur (7 March 2010). "Abundance, demography and population structure of Pelophylax ridibundus (Anura: Ranidae) in 26-August National Park (Turkey)". North-Western Journal of Zoology 7 (1): 5–16. http://biozoojournals.ro/nwjz/content/v7n1/nwjz.101102.Erismis.pdf. 
  6. Shakhparonov, Ogurtsov, Vladimir, Sergey (November 2016). "Marsh frogs, Pelophylax ridibundus, determine migratory direction by magnetic field". Journal of Comparative Physiology 203 (1): 35–43. doi:10.1007/s00359-016-1132-x. பப்மெட்:27885506. https://www.researchgate.net/publication/310803255. 
  7. Çiçek, Mermer, Kerim, A. (January 2007). "Food composition of the marsh frog, Rana ridibunda Pallas, 1771, in Thrace". Turkish Journal of Zoology 31 (1): 83–90. https://www.researchgate.net/publication/287916435. 
  8. "A possible mutualistic interaction between vertebrates: frogs use water buffaloes as a foraging place". Acta Herpetologica 12 (1): 113–116. July 2017. https://www.researchgate.net/publication/318239693. 
  9. Berger, L. (1970). "Some characteristics of the crossess within Rana esculenta complex in postlarval development". Ann. Zool. 27: 374–416. 
  10. 10.0 10.1 Holsbeek, G.; Jooris, R. (2010). "Potential impact of genome exclusion by alien species in the hybridogenetic water frogs (Pelophylax esculentus complex)". Biol Invasions (Springer Netherlands) 12: 1–13. doi:10.1007/s10530-009-9427-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1387-3547. http://www.herpetologynotes.seh-herpetology.org/Volume6_PDFs/Mori_HerpetologyNotes_volume6_pages515-517.pdf. பார்த்த நாள்: 2015-06-19. 
  11. "A record of alien Pelophylax species and widespread mitochondrial DNA transfer in Kaliningradskaya Oblast' (the Baltic coast, Russia)". BioInvasions Records 9. June 2020. https://www.reabic.net/journals/bir/2020/Accepted/BIR_2020_Litvinchuk_etal_correctedproof.pdf. பார்த்த நாள்: 2020-09-20. 
தொகு

Listen to Pelophylax ridibundus call sound

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்புநிலத்_தவளை&oldid=3739377" இலிருந்து மீள்விக்கப்பட்டது