சதுப்பு மண்கொத்தி

சதுப்பு மண்கொத்தி
Winter plumage
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. stagnatilis
இருசொற் பெயரீடு
Tringa stagnatilis
(Bechstein, 1803)

சதுப்பு மண்கொத்தி [2] எனப்படும் சதுப்பு உள்ளான் (Marsh sandpiper -- Tringa stagnatilis) ஒரு சிறிய கரைப்பறவை ஆகும். ஐரோப்பாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் மத்திய ஆசியப்பகுதிகளின் ஸ்டெப்பி புல்வெளிகளிலும் டேய்கா ஈரநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும் இச்சிறிய உள்ளான்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் குளிர்காலங்களில் வலசை போகின்றன.

உடல் தோற்றம்

தொகு

இது பச்சைக்கால் உள்ளானை விட சிறிய பறவை ஆகும். இது 22 முதல் 25 செமீ நீளம் உடையது. பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் நீளமான கால்களை உடையது.[2]

இனப்பெருக்க காலத்தில்

தொகு

முன்கழுத்தில் கோடுகள் காணப்படும்; மார்பு மற்றும் மேல் பகுதிகளில் கொப்பளங்கள் போன்ற தோற்றம் கொண்ட இறக்கையும் பட்டைகளும் காணப்படும்.

இனப்பெருக்கம் அல்லா காலத்தில்

தொகு

மேல்பாகங்கள் சாம்பல் நிறத்தில் காணப்படும்; முன்கழுத்து மற்றும் கீழ்ப்பாகங்கள் வெள்ளையாக இருக்கும்.

இளைய பறவை

தொகு

சற்றே பழுப்பு மஞ்சள் நிற ஓரங்களுடன் மேல்பாகங்களில் கருத்த கோடுகள் காணப்படும்.

வாழ்விடம்

தொகு

ஆறுகள், ஏரிகளை ஒட்டிய கரைப்பகுதி மற்றும் சதுப்பு நிலம் அல்லது ஈரநிலங்கள் ஆகிய பகுதிகளில் சதுப்பு மண்கொத்திகளைக் காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tringa stagnatilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 98:7 - BNHS (2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்பு_மண்கொத்தி&oldid=3850567" இலிருந்து மீள்விக்கப்பட்டது