பச்சைக்காலி

பச்சைக்காலி (Common Green Shank) என்பது ஒரு வகை உள்ளான் ஆகும். இது உள்ளான்களிலேயே உருவில் பெரியது. இந்த உள்ளான் கரையோரப் பறவை வகையினைச் சார்ந்தது.

பச்சைக்காலி
Greenshank (Tringa nebularia).jpg
Summer plumage, Standlake, Oxfordshire
Tringa nebularia - Laem Phak Bia.jpg
Winter plumage, Laem Phak Bia, Thailand
Song and calls, recorded in west Sutherland, Scotland
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Tringa
இனம்: T. nebularia
இருசொற் பெயரீடு
Tringa nebularia
(Gunnerus, 1767)

பெயர்கள்தொகு

தமிழில்  :பச்சைக்காலி ஆங்கிலப்பெயர்  :Common Greenshank அறிவியல் பெயர் :Tringa nebularia [2]

உடலமைப்புதொகு

இதனுடைய உடல் நீளம் 36 செ.மீ. வரை இருக்கும் இது பச்சை நிற அலகினையும் கால்களையும் கொண்டது. உள்ளான்களிலே உருவில் பெரியது. சாம்பல் தோய்ந்த பழுப்பு நிற உடலைக் கொண்ட இதன் தலை, பின் முதுகு, பிட்டம், வால் மார்பு, வயிறு ஆகியன வெண்மை நிறம் கொண்டவை.

காணப்படும் பகுதிகள் ,உணவுதொகு

இவை குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் வலசை போகத் தொடங்கும். இதனைத் தமிழகம் எங்கும் ஏரி, ஆறு இவற்றின் படுகைகளிலும் கடற்கரைகளிலும் காணலாம். தனித்தும் மூன்று முதல் ஐந்து வரையான சிறு குழுவாகவும் நீரில் இறங்கி, நத்தை, நண்டு புழு பூச்சிகள், தவளைக் குஞ்சு ஆகியவற்றை இரையாகத் தேடி உண்ணும். ட்டீவி, ட்டீவி, ட்டீவி எனக்குரல் கொடுத்தப்படி எழுந்து பறக்கும்[3]

இனப்பெருக்கம்தொகு

மார்ச் மத்தியில் இனப்பெருக்கம் துவங்கும். இனப்பெருக்க பருவத்திற்குரிய காலத்திற்கான வண்ண நிறங்கள் உடலில் தோன்றத் தொடங்கும். ஏப்ரல் மத்தியில் தொலைதூரம் பறப்பதற்கு தேவையான சக்தியைத்தரும் கொழுப்பு உடலில் சேமிக்கத் தொடங்க, உடல் பருமனாகத் தோன்றும். அப்போது இவை பெருங்கூட்டமாக ஒன்று திரண்டு பறக்கும்.

படங்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tringa nebularia
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்தொகு

  1. "Tringa nebularia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "பச்சைக்காலிCommon_greenshank". பார்த்த நாள் 31 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:48
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைக்காலி&oldid=3219315" இருந்து மீள்விக்கப்பட்டது