சதுர அவரை

அவரை வகை
சதுர அவரை
சதுர அவரை பூக்கள், இலைகள் மற்றும் விதைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
குடும்பம்:
இனம்:
P. tetragonolobus
இருசொற் பெயரீடு
Psophocarpus tetragonolobus
(கரோலஸ் லின்னேயஸ்) D.C.

சதுர அவரை (Winged_bean) இதன் தாவரவியல் பெயர் சோஃபோசார்ப்பஸ் டெட்ராகொனலோபஸ். இது கோவா அவரை, ஐவிரலி அவரை, இறகு அவரை, மணிலா அவரை, கடல்நாக அவரை, சதுரப் பயறு என்று அழைக்கப்படுகிறது. இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் நியூ கினியா என்று கருதப்படுகிறது.[1]

இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உண்ண ஏற்றவை. இலைகள் கீரையாகவும், பூக்கள் பச்சைக்காய்கறியாகவும், கிழங்குகள் வேக வைக்கப்பட்டும், விதைகள் சோயா மொச்சையைப் போலவும் உண்ணப்படுகின்றன. இதன் வேர்கள் கிழங்குகளாகவும், காய்கள் இறகுகளுடனும் காணப்படுகின்றன. இது படரும் தாவரமாகும்.

இது வெப்பமண்டலப் பயிராகும். இதன் நீர்த்தேவை அதிகம். ஆனால், நீர்த்தேங்குதல் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். இது வளர்வதற்கு 25°செ வெப்பம் தேவை.

சதுர அவரை, முற்றிய பச்சை விதை
உணவாற்றல்1711 கிசூ (409 கலோரி)
41.7 g
நார்ப்பொருள்25.9 g
16.3 g
நிறைவுற்றது2.3 g
ஒற்றைநிறைவுறாதது6 g
பல்நிறைவுறாதது4.3 g
29.65 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(90%)
1.03 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(38%)
0.45 மிகி
நியாசின் (B3)
(21%)
3.09 மிகி
(16%)
0.795 மிகி
உயிர்ச்சத்து பி6
(13%)
0.175 மிகி
இலைக்காடி (B9)
(11%)
45 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(44%)
440 மிகி
இரும்பு
(103%)
13.44 மிகி
மக்னீசியம்
(50%)
179 மிகி
மாங்கனீசு
(177%)
3.721 மிகி
பாசுபரசு
(64%)
451 மிகி
பொட்டாசியம்
(21%)
977 மிகி
சோடியம்
(3%)
38 மிகி
துத்தநாகம்
(47%)
4.48 மிகி

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

தொகு
  1. Hymowitz, T; Boyd, J. (1977). "Ethnobotany and Agriculture Potential of the Winged Bean". Economic Botany 31 (2): 180–188. doi:10.1007/bf02866589. 

குறிப்புகள்

தொகு
  • Venketeswaran, S., M.A.D.L. Dias, and U.V. Weyers. The winged bean: A potential protein crop. p. 445. In: J. Janick and J.E. Simon (eds.), Advances in new crops. Timber Press, Portland, OR (1990).
  • Verdcourt, B.; Halliday, P. (1978). "A revision of Psophocarpus (Leguminosae-Papilionoideae-Phaseoleae)". Kew Bulletin. 33: 191–227. doi:10.2307/4109575
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_அவரை&oldid=3916259" இலிருந்து மீள்விக்கப்பட்டது