சத்யபோத தீர்த்தர்

சத்யபோத தீர்த்தர் ( Satyabodha Tirtha) ( சுமார் 1710 - 1783 ) ஒரு இந்திய தத்துவவாதியும், அறிஞரும், யோகியும், ஆன்மீகவாதியும் மற்றும் துறவியும் ஆவார். இவர் உத்தராதி மடத்தின் 25 வது குருவாக மார்ச் 1744 - 9 மார்ச் 1783 வரை இருந்தார். [1] சத்யபோத தீர்த்தர் தனது காலத்தின் இந்து மற்றும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் கௌரவிக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஏறக்குறைய அனைத்து இளவரசர்களும் இவரை வணங்கி, அவருடைய தீவிர சீடர்களாக இருந்தனர். கூட்டியின் முராரி ராவ், ரகோஜி போசலே மற்றும் பதே சிங் ராவ் கெய்க்வாட் ஆகியோர் இவரது சிறந்த சீடர்கள்.[2] சாவனூரில் உள்ள உத்தராதி மடம் (சத்யபோதரின் பிருந்தாவனம் உள்ளது) இவரது பெயரால் சத்தியபோத மடம் என்று பெயர் பெற்றது. [3]

சத்யபோத தீர்த்தர்
பிறப்பு1710
ராய்ச்சூர்
இறப்பு1783
சாவனூர்
இயற்பெயர்ராமாச்சார்யா
சமயம்இந்து சமயம்
குருசத்யபிரிய தீர்த்தர்

சுயசரிதை

தொகு

சத்யபோத தீர்த்தர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ராய்ச்சூரில் பிறந்தார். காஞ்சி வாதிராஜ் ஆச்சார் எழுதிய சத்யபோத விஜயம் என்னும் நூலில் இவரது வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான தகவல்கள் காணப்படுகின்றன. 1710 இல் ஒரு பாரம்பரிய தேசஸ்த் பிராமணர் குடும்பத்தில் பிறந்த இவர், ராமச்சார்யா என்று அழைக்கப்பட்டார். இவரது தந்தை பெயர் ஹரியாச்சாரியார் மற்றும் தாயார் பெயர் அரலாபாய். 8 வயதில் சாத்திரம் படிக்க ஆரம்பித்தார். இவர் உத்தராதி மடத்தின் தலைவரானபோது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் சத்யபோத தீர்த்தர்.[4] உத்தராதி மடத்தின் துறவுப் பொறுப்பை ஏற்று இந்தியா முழுவதும் தனது சீடர்களுடன் பயணம் செய்து, அரசர்கள் மற்றும் நவாப்களிடமிருந்து கணிசமான செல்வம், நிலங்கள் ஆகியவற்றாஇப் பெற்றார். மேலும், தத்துவ அறிஞர்களுடன் விவாதங்களில் பெங்கேற்றார்.[5] [6] [7]

சான்றுகள்

தொகு
  1. Sharma 2000, ப. 209.
  2. Ritti 1961, ப. 4.
  3. Glasenapp 1992, ப. 40.
  4. Ritti 1961, ப. 3.
  5. Chitnis 1994, ப. 109.
  6. Chitnis 2000, ப. 86.
  7. Kulakarni & Nayeem 2000, ப. 183.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யபோத_தீர்த்தர்&oldid=3770539" இலிருந்து மீள்விக்கப்பட்டது