சந்திரமௌலீசுவரர் கோவில்
சந்திரமௌலீசுவரர் கோவில் (Chandramouleshwara Temple) என்பது கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளியிலிருந்து 2 கி.மீ தூரத்திலுள்ள உன்கால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1][2] இது, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.
கர்நாடகாவின் ஹூப்ளி-தார்வாடு தேசிய நெடுஞ்சாலையில் ஹூப்ளியின் புறநகரிலுள்ள உன்கால் [3][4][5] என்ற இடத்தில் உள்ளது. (அநேகமாக வரலாற்று ரீதியாக இந்தப் பகுதிக்கு உனுக்கல்லு எனப் [6][3]) பெயரிடப்பட்டிருந்தது). அழகான, இயற்கையான உன்கால் ஏரி இந்த பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு நல்ல சுற்றுலா இடமாக உள்ளது.
வடக்கு கர்நாடகாவில் உள்ள மற்ற சிவன் கோயில்களிலிருந்து இக்கோயில் வேறுபட்டது. கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் உள்ளன. மொத்தம் பன்னிரண்டு கதவுகள் உள்ளன. இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. சன்னதியின் பிரதான தெய்வமான சந்திரமௌலீசுவர் கிழக்கு நோக்கி எதிர்கொள்கிறார். மற்றொரு இலிங்கமனது நான்கு முகங்களைக் கொண்டிருப்பதால் இது சதுர்முகலிங்கேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை திறந்திருக்கும்.
வரலாறு தொகு
இது, சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். [7] சாளுக்கியர்கள் 11 - 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவிலைக் கட்டினர். இது பாதமி, அய்கொளெ மற்றும் பட்டடக்கல் கோயில்களின் வரிசையில் கட்டப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான இதை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனது பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டத்தின் (1958) கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக தரப்படுத்தியுள்ளது. [8]
பாதுகாப்பும் மறுசீரமைப்பும் தொகு
உன்கலில் உள்ள சந்திரமௌலீசுவர் கோயிலின் பாதுகாப்புக்கும் மறுசீரமைப்புக்கும் அவசர தேவை உள்ளது. [9] [10] கோயில் வளாகம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான துடுப்பாட்ட மைதானமாக விளங்குகிறது. இது அரசாங்கத்தின் நகரமயமாக்கலுக்கு பலியாகிவிட்டது. கோயிலுக்கு கிட்டத்தட்ட முறையான சாலை வசதி இல்லை. கோயிலின் நான்கு பக்கங்களிலும் உள்ள அத்துமீறல்கள் வாகனத்தின் மூலம் செல்வதை கடினமாக்குகின்றன. சந்திரமௌலீசுவர் கோயிலை அடைய ஒருவர் வீடுகளையும் குறுகிய பாதைகளையும் கடக்க வேண்டும்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கோவில் வளாகத்தில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு ஒருசில பணிகளைத் தொடங்கியது. ஆக்கிரமிப்புகளைத் தடுக்க ஒரு சுவர் அமைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால் இந்த வேலை முழுமையடையாமல் இருக்கிறது.
உன்கல் ஏரி தொகு
ஹுப்ளி-தார்வாட்டின் நீர் ஆதாரங்களில் ஒன்றான உன்கல் ஏரி ஒரு சுற்றுலா இடமாகும். உன்கல் ஏரியில் படகு வசதியும் உள்ளது.
மேலும் காண்க தொகு
புகைப்படத் தொகுப்பு தொகு
Photo Gallery
|
---|
|
மேற்கோள்கள் தொகு
- ↑ "History of Goa" இம் மூலத்தில் இருந்து 2008-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081121130719/http://www.goaindiatourism.com/goa/History-of-Goa2.html.
- ↑ "Alphabetical List of Monuments - Karnataka - Dharwad, Dharwad Circle, Karnataka". http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_dharwad.asp.
- ↑ 3.0 3.1 "History of Karnataka, The Chalukyas of Kalyani" இம் மூலத்தில் இருந்து 2008-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081201005142/http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka24.htm.
- ↑ "The Chalukyan magnificence" இம் மூலத்தில் இருந்து 2009-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090510023153/http://www.hinduonnet.com/fline/fl2201/stories/20050114000106500.htm.
- ↑ "THE CHALUKYAN ARCHITECTURE" இம் மூலத்தில் இருந்து 3 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080703213400/http://www.culturopedia.com/Architecture/chalukyanstyle.html.
- ↑ "CHAPTER 9. THE CALUKYAS AND THE KALACURYAS OF KALYANI. HISTORY – ANCIENT PERIOD, Chalukya". http://www.maharashtra.gov.in/pdf/gazeetter_reprint/History-I/chapter_9.pdf.
- ↑ "Tourist spots in Hubli-Dharwad". Hubli Dharwad Municipal Corporation இம் மூலத்தில் இருந்து 2013-10-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017130426/http://hdmc.gov.in/node/163.
- ↑ http://asi.nic.in/asi_monu_alphalist_karnataka_dharwad.asp
- ↑ D’Souza, Vincent (25 November 2008). "900-yr-old temple turns playground, Architectural Marvel Is Victim Of Govt Apathy". Times of India (Bangalore): p. 7 இம் மூலத்தில் இருந்து 2011-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110929020229/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_TOI&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=TOIBG%2F2008%2F11%2F25&ID=Ar00700.
- ↑ "Encroachments threaten 900-year-old temple". 2001-05-13. http://timesofindia.indiatimes.com/articleshow/41670135.cms.