சந்திர ராஜேசுவர ராவ்
சந்திர ராஜேஸ்வர ராவ் (Chandra Rajeshwara Rao) (ஜூன் 6, 1914 - ஏப்ரல் 9, 1994) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராவார்.[1] இவர் தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் (1946-1951). இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பொதுச் செயலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். 1992இல் உடல்நலக் காரணங்களுக்காக வேலையை விட்டுவிட்டார்.[2][3]
சந்திர ராஜேஸ்வர ராவ் | |
---|---|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1964–1990 | |
முன்னையவர் | ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு |
பின்னவர் | இந்திரஜித் குப்தா |
பதவியில் 1950–1954 | |
முன்னையவர் | பி. டி. ரணதிவே |
பின்னவர் | அஜய் கோஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மங்களாபுரம், கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 6 சூன் 1914
இறப்பு | 9 ஏப்ரல் 1994 |
பிள்ளைகள் | சந்திர சந்திரசேகர் (மகன்) |
வேலை | இந்திய விடுதலைப் போராட்ட வீர, சோசலிசவாதி, தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவர் |
விருதுகள் | லெனின் ஆணை |
வாழ்க்கை
தொகுஇவர் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். ஜூன் 6, 1914 அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மங்களாபுரம் கிராமத்தில் பிறந்தார்.[4] வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும், விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவக் கல்வியைப் பெற்றார். பின்னர் 1931இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (சிபிஐ) சேர்ந்தார். 1954 - 1955இல் அகில இந்திய விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.[5] திசம்பர் 1964 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1974இல் "லெனின் ஆணை" விருது வழங்கப்பட்டது.
குடும்பம்
தொகுஇவரது மகன் சந்திர சந்திரசேகரும், பேரன் சந்திர ஜெய்தீப்பும் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hans India". 4 June 2013 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107011035/http://www.thehansindia.com/2013/06/04/chandra-rajeswara-raos-birth-centenary-celebrations/.
- ↑ 2.0 2.1 Special Correspondent (9 September 2008). "Chandra Rajeswara Rao’s kin to join Congress" (in en-IN). தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Chandra-Rajeswara-Raorsquos-kin-to-join-Congress/article15299692.ece. பார்த்த நாள்: 31 October 2017.
- ↑ "CPI in search of a new leader in city". தி இந்து. 5 May 2007 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201150748/http://www.hindu.com/2007/05/05/stories/2007050517950500.htm.
- ↑ "CR: Some Milestones in His Life and Work". New Age Weekly. 21 June 2013. http://www.newageweekly.in/2013/06/cr-some-milestones-in-his-life-and-work.html.
- ↑ "Chandra Rajeswar Rao". thefreedictionary.com.