சந்து லால் சாகு

இந்திய அரசியல்வாதி

சந்து லால் சாகு (Chandu Lal Sahu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று சத்தீசுகர் மாநிலம் இராய்ப்பூரில் புனீம் ராம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இராச்சீவ் லோச்சன் கல்லூரியில் வணிகவியலில் இளநிலைப் பட்டமும் இராய்ப்பூர் துர்கா கல்லூரியில் சட்டப் பாடத்தில் இளநிலை பட்டமும் பெற்றார். ஒரு விவசாயியாகவும் வழக்கறிஞராகவும் செயல்பட்டார். சாந்தா தேவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக மகாசமுந்து மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] முன்னதாக, இவர் 2003 ஆம் ஆண்டில் இராச்சிம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்து லால் சாகு
Chandu Lal Sahu
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 (2009)–2019 (2019)
முன்னையவர்அச்சீத்து இயோகி
பின்னவர்சூனி இலால் சாகு
தொகுதிமகாசமுந்து மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர், சத்தீசுகர் சட்டப் பேரவை
பதவியில்
2003 (2003)–2008 (2008)
முன்னையவர்அமிதேசு சுக்லா
பின்னவர்அமிதேசு சுக்லா
தொகுதிஇராச்சிம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1959 (1959-06-01) (அகவை 64)
தேகா, ராய்ப்பூர், சத்தீஸ்கர், சத்தீசுகர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்சாந்தா தேவி சாகு
பிள்ளைகள்3
வாழிடம்(s)கரியாபந்து , சத்தீசுகர்
வேலைவிவசாயி, வழக்கறிஞர்
As of 12 திசம்பர், 2016
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Profile of Members". Government of India. Archived from the original on 1 January 2012. பார்க்கப்பட்ட நாள் 31 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்து_லால்_சாகு&oldid=3839827" இலிருந்து மீள்விக்கப்பட்டது