சந்தோசு யாதவ் (மலையேறுபவர்)
சந்தோஷ் யாதவ் (Santosh Yadav; பிறப்பு 10 அக்டோபர்,1967) என்பவர் ஓர் இந்திய மலையேறுபவர் ஆவார். எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறிய உலகின் முதல் பெண்மணி மற்றும் காங்ஷுங் முகத்திலிருந்து எவரெஸ்ட் உச்சியை வெற்றிகரமாக ஏறிய முதல் பெண்மணி ஆவார்.[1] இவர் இளமையாக இருந்தபோது அல்லது பதின்மப் பருவத்திலிருந்தபோது, சமூகத்தில் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை விமர்சிப்பதை வழக்கமான நடவடிக்கையாக மேற்கொண்டார். இவற்றில் ஒன்று ஆடை குறித்த விமர்சனம்.[2] அரியானாவின் ரேவாரி மாவட்டத்தின் ஜோய்ந்யாஸ் கிராமத்தைச் சேர்ந்த அவரது சமூகத்தில் உள்ள மற்ற பெண்கள் அனைவரும் புடவைகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணியும் போது இவர் பெரும்பாலும் குட்டைப் பாவாடை அணிய விரும்பினார்.[3] இவர் தனது உடை மற்றும் நடவடிக்கைகளில் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும் எது சரி, எது தவறு என்பது குறித்து மிகுந்த அறிவைக் கொண்டிருந்தார். இவர் "தான் சரியான மற்றும் பகுத்தறிவுள்ள பாதையைத் தேர்ந்தெடுத்தால், என்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் மாற வேண்டும் என்பதில் ஆரம்பத்தில் இருந்தே நான் உறுதியாக இருந்தேன், என்னை அல்ல". இவர் 1 மே 1992-இல் மற்றும் மீண்டும் மே 1993 இல்- ஓர் இந்தோ-நேபாள அணியுடன் எவரெஸ்ட் உச்சத்தை அடைந்தார்.
சந்தோசு யாதவ் | |
---|---|
சந்தோசு யாதவ் 2008-இல் | |
பிறப்பு | 10 அக்டோபர் 1967 ஜோனியாவாஸ், ரேவாரி மாவட்டம், அரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | மலையேறுபவர் |
வாழ்க்கைத் துணை | உத்தம் குமார் இலால் (தி. 1992) |
விருதுகள் | பத்மசிறீ (2000), தேசியச் சாகச விருது (1994) |
வலைத்தளம் | |
santoshyadavmountaineer |
1992 ஆம் ஆண்டில் தனது எவரெஸ்ட் பயணத்தின் போது, இவர் தன்னுடன் மலையேறிய மோகன் சிங் என்பவரின் உயிரைக் காப்பாற்றினார். மேலும் உயிர்க்காற்றைப் பகிர்ந்து கொண்டதன் மூலம். தெற்கு கோலில் மயங்கிக் கிடந்த ஒரு மலையேறுபவரைக் காப்பாற்ற முயன்றாள், ஆனால் இவரைக் காப்பாற்றுவதில் தோல்வியுற்றார்.
இளமை
தொகுஇந்தியாவின் அரியானா மாநிலத்தின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஜோனியாவாசு கிராமத்தில் ஐந்து சிறுவர்கள் கொண்ட குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார் சந்தோசு. இவர் ஓர் உள்ளூர் கிராமப் பள்ளியில் கல்வி் பயின்றார். பின்னர் தில்லி சென்று அங்குள்ள ஒரு பள்ளியில் சேர்ந்தார். செய்ப்பூரில் உள்ள மகாராணி கல்லூரியில் பயின்ற போது இவர், தனது அறையிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரில் மலையேறுபவர்களைக் காண முடிந்தது. நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம் வழங்கிய விடுதியில் இந்திய அட்சிப் பணித் (இஆப) தேர்வுகளுக்கான தனது படிப்பை வெற்றிகரமாகத் தொடர்ந்தபோது, உத்தரகாசியின் நேரு மலையேறும் நிறுவனத்தில் சேர இவர் ஈர்க்கப்பட்டார்.[4] பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் யாதவின் மலையேறுதல் ஆர்வம் வளர்ந்தது.
தொழில்
தொகு1992ஆம் ஆண்டில், யாதவ் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார், அப்போது இவருக்கு 20 வயது மட்டுமே. இந்தச் சாதனையை நிகழ்த்திய உலகின் மிக இளைய பெண் என்ற பெருமையினை சந்தோசு யாதவ் பெற்றார். ஆனால் 2014ஆம் ஆண்டில் 13 வயது நிறைந்த பூர்ணா இவரின் சாதனையை முறியடித்தார்.[5] பன்னிரண்டு மாதங்களுக்குள், யாதவ் ஓர் இந்தோ-நேபாள பெண்கள் பயணத்தில் உறுப்பினரானார். இரண்டாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதனால் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார். இவர் இந்தோ-திபெத் எல்லைக் காவல் அதிகாரியாகவும் இருந்தார். 1989ஆம் ஆண்டில் நூன் குனுக்கு ஒன்பது நாடுகள் கொண்ட பன்னாட்டு மலை ஏறும் முகாமில் ஒரு பகுதியாக இருந்தார். மேலும், இவர் ஒரு தீவிரச் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருப்பதால், இமயமலையில் கொட்டப்பட்ட 500 கிலோ கழிவுகளைச் சேகரித்தார்.[6]
சந்தோசு யாதவுக்கு 1994ஆம் ஆண்டு தேசியச் சாகச விருதும், 2000ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது.[1][7]
பயணங்கள்
தொகு- 1999ஆம் ஆண்டில், சந்தோசு யாதவ் எவரெஸ்டில் உள்ள காங்ஷுங் முகத்திற்கு இந்திய மலையேறும் பயணத்தை வழிநடத்தினார்.
- 2001ஆம் ஆண்டில், எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கு முகத்திற்கு ஒரு மலையேறும் குழுவை வழிநடத்தினார்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Santosh Yadav feels motivated to climb Everest again". News.webindia123.com. 2007-05-11. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ early marriage
- ↑ Joinyawas village of Rewari District of Haryana
- ↑ name="hindu">{{cite news duonnet.com/thehindu/mp/2003/05/29/stories/2003052901110400.htm |archive-date=2003-06-08 |title=n top of the world at Baluchi! |date=9 May 2003 |url-status=usurped
- ↑ "Meet Santosh Yadav, The World's First Woman To Have Scaled Mt Everest Twice". femina.in (in ஆங்கிலம்).
- ↑ "Santosh Yadav". India Speakers Bureau.
- ↑ Press Information Bureau, India(20 July 1995). "National Adventure Awards Announced". செய்திக் குறிப்பு.