மாலவத் பூர்ணா
மாலவத் பூர்ணா (Malavath Purna) (பிறப்பு: 10 சூன் 2000) இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் நிசாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் மலையேற்ற வீரங்கனை ஆவார். இவர் 14-வது வயது முடியும் தருவாயில் உலகின் உயரமான எவரஸ்டை ஏறி சாதனை படைத்தார்.[1] 27 சூலை 2017 அன்று எல்பிரஸ் மலையை ஏறிக்கடந்தவர்.[2] இவர் இறுதியாக 5 சூன் 2002 அன்று, 7-வது கொடிமுடியான வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள 6,190 மீட்டர் உயரமுள்ள டெனாலி மலையில் ஏறி சாதனை படைத்தார்.[3]
மாலவத் பூர்ணா | |
---|---|
பிறப்பு | 10 சூன் 2000 நிசாமாபாத் மாவட்டம், தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | மினசோட்டா மாநில பல்கலைக்கழகம், மங்காடோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | மலை ஏற்ற வீரங்கனை |
மெக்கின்லி
(6,194 m)
(6,194 m)
பிளாங்க்
(4,810 m)
(4,810 m)
எல்பிரஸ்
(5,642 m)
(5,642 m)
எவரெசுட்டு
(8,848 m)
(8,848 m)
கிளிமஞ்சாரோ
(5,895 m)
(5,895 m)
அக்கோன்காகுவா
(6,961 m)
(6,961 m)
வின்சன்
(4,892 m)
(4,892 m)
கொஸ்கியஸ்கோ
(2,228 m)
(2,228 m)
புன்சாக் ஜெயா
(4,884 m)
(4,884 m)
இவர் இளம் வயதில் உலகின் ஏழு கொடுமுடிகளை ஏறியமைக்காக புகழ் பெற்றவர். இவர் பள்ளிப்படிப்பை தெலங்காணாவில் முடித்த பின் மலையேற்றப் பயிற்சியை டார்ஜீலிங் இமயமலை மலையேற்ற பயிற்சி நிறுவனத்தில் பயின்றார்.
மாலவத் பூர்ணா ஏறிய 7 மலைக் கொடுமுடிகள்
தொகு- எவரெசுட்டு சிகரம், நேபாளம், 2014
- கிளிமஞ்சாரோ மலை, எத்தியோப்பியா, கிழக்கு ஆப்பிரிக்கா, 2016
- எல்பிரஸ் மலை, தெற்கு உருசியா, 2017
- அக்கோன்காகுவா, தென் அமெரிக்கா, 2019
- புன்சாக் ஜெயா, இந்தோனேசியா, 2019
- வின்சன் மலைத்திரள், அண்டார்டிகா, 2019[4]
- டெனாலி, அலாஸ்கா, வட அமெரிக்கா
இதனையும் காண்க
தொகு- ஏழு கொடுமுடிகள்
- குலாம் ரசூல் கல்வான்
- மல்லி மஸ்தான் பாபு
- டஷி நுங்ஷி மாலிக் (இரட்டை சகோதரிகள்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "13-year-old Malavath Purna becomes youngest woman to scale Everest". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/india/india-others/13-year-old-Poorna-Malavath-becomes-youngest-woman-to-scale-everest/. பார்த்த நாள்: 12 March 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Poorna Malavath on top of Mt. Elbrus". dreamwanderlust.com. 28 July 2017.
- ↑ Telangana mountaineer Poorna climbs Mt Denali in US
- ↑ "7 summits in 7 continents: Telangana girl Malavath Poorna one step away from goal". The Indian Express (in ஆங்கிலம்). 2019-12-31. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.