சந்த் உசுமானி
சந்த் உசுமானி (Chand Usmani) (3 சனவரி 1933 - 26 நவம்பர் 1989) 1950களிலிருந்து 1980களின் பிற்பகுதி வரை பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் 1971இல் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் . சுய தியாகம் செய்யும் மனைவியாகவும், தாய் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும் இவர் நினைவுகூரப்படுகிறார். "ஜீவன் ஜோதி" என்ற பாலிவுட் படத்தில் நடிகர் சம்மி கபூருக்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், பாரதி, பாப் ரே பாப் , சாம்ராட் பிருத்விராஜ் சவுகான், ரங்கீன் ரேடென், நயா டவுர், பிரேம் பத்ரா, பெச்சான் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.
சந்த் உசுமானி | |
---|---|
ஜீவன் ஜோதி என்ற படத்தில் சந்த் உசுமானி (1953) | |
பிறப்பு | ஆக்ரா, ஒன்றிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தரப் பிரதேசம், இந்தியா) | 3 சனவரி 1933
இறப்பு | 26 நவம்பர் 1989 மாகிம், மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 56)
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1953–1987 |
விருதுகள் | பெச்சான் (1971) படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது |
சுயசரிதை
தொகுசந்த்பீபி கானம் உசுமானி 3 சனவரி 1933 அன்று உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் ஒரு பஷ்தூன் குடும்பத்தில் பிறந்தார்.[1] ஆன் மிலோ சஜ்னா படத்தின் இயக்குநரான முகுல் தத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[2] இவர்களுக்கு ரோஷன் என்ற ஒரு மகன் பிறந்தான். திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பைக்கு வந்த இவர் மாகிமில் உள்ள ஒரு வீட்டில் தங்கி பட வாய்ப்புகளை தேடினார். இவர் 26 நவம்பர் 1989 அன்று மும்பையில் இறந்தார்.
தொழில்
தொகுசந்த் உசுமானி 1949 இல் 'கர்தார்-கொலினோஸ்-தெரசா போட்டி' என்ற திறமைப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[3] 1953 ஆம் ஆண்டில், ஜீவன் ஜோதியில் சம்மி கபூருக்கு கதாநாயகியாக அறிமுகமானார் (சம்மி கபூரின் அறிமுகமும் கூட).[2] பாரதி, பாப் ரே பாப் , சாம்ராட் பிருத்விராஜ் சவுகான் ஆகிய படஙக்ளில் நடித்தார். மேலும் ரங்கீன் ரேடென், நயா டவுர், பிரேம் பத்ரா , பெச்சான் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் மிகவும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார்: ரங்கீன் ரேடனின் (1956) ஒரு விமர்சனத்தில் "ஒரு சிறந்த நடிப்பை அளிக்கிறார்; சிறந்த வளர்ந்த கதாபாத்திரமாக இவர் படத்தின் வாழ்க்கை மற்றும் ஆன்மாவாக மாறினார்" என்று கூறிகிறது.[4] பாப் ரீ பாப்பில், "உசுமானி திரையில் வெளிப்படுத்திய மகிழ்ச்சிக்காக" ஒரு முக்கிய காட்சியைக் குறிப்பிடப்பட்டுள்ளது.[5] இந்தியத் திரைப்பட அறக்கட்டளையின் விமர்சனத்தில் "இதயத்தை சூடேற்றும் புன்னகையுடன் உற்சாகமான சந்த் உசுமானி" என விவரிக்கிறது.[3] 1970 ஆம் ஆண்டு வெளியான பெச்சான் திரைப்படத்தில் சம்பா என்ற பாலியல் தொழிலாளியாக நடித்ததற்காக 1971 இல் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். ஏறக்குறைய 40 வருடங்களுக்குப் பிறகு, தி இந்துவின் திரைப்பட விமர்சகர், "சந்த் உசுமானி சம்பாவின் பாத்திரத்திற்கு கட்டுப்பாடு, சமநிலை மற்றும் கருணை ஆகியவற்றைக் காட்டி நியாயமாகச் செயல்படுகிறார்" என்று எழுதினார். ஒரு நீண்ட வாழ்க்கை இருந்தபோதிலும், இவர் பேச்சு நிகழ்ச்சித் தொகுப்பாளரான தபஸ்ஸூமுக்கு அளித்த பேட்டியில், தனக்கு ஒரு முகவர்/மேலாளர் இல்லாததற்கு வருத்தப்பட்டதாக கூறினார். இதனால் தான் மாறுபட்ட பாத்திரங்களைப் பெறவில்லை எனவும் அதிக வெற்றியையும் பெறவில்லை எனவும் கூறினார்.[2] இவரது பல பாத்திரங்களில், தன்னையே தியாகம் செய்யும் மனைவியாகவும், தாயாகவும், காதலி அல்லது சகோதரியாகவும் நடித்தார். மகாசுவேதா தேவியின் 1986 சிறுகதையான 'தி வெட்-நர்ஸ்' ஒரு இல் இவரைப்பற்றி சுருக்கமாக விவரித்துள்ளார்.
- ஜசோதா இந்தியப் பெண்மையின் உண்மையான உதாரணம். அவள் கற்பு மற்றும் அன்புள்ள மனைவி மற்றும் அர்ப்பணிப்புள்ள தாய், கற்பனை வரம்புகளை விரிவாக்கும் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இலட்சியங்கள் மற்றும் சதி தொடங்கி பல நூற்றாண்டுகளாக பிரபலமான இந்திய ஆன்மாவில் உயிருடன் இருந்தனர். -சாவித்ரி-சீதா நம் காலத்தில் நிருபா ராய் முதல் சந்த் உசுமானி வரை."[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Untold Story of Chand Usmani - Bollywood Stories: Tabassum Talkies".
- ↑ 2.0 2.1 2.2 "The Untold Story of Chand Usmani - Bollywood Stories: Tabassum Talkies"."The Untold Story of Chand Usmani - Bollywood Stories: Tabassum Talkies".
- ↑ 3.0 3.1 Film Heritage Foundation, India. "Character Artists of Indian Cinema - Chand Usmani".
- ↑ "Review of Rangeen Raten". Swatantra 11: 38. 1956. https://books.google.com/books?id=wWcPAQAAIAAJ&q=%22Chand+Usmani%22. பார்த்த நாள்: 26 November 2018.
- ↑ Sharma, Devesh (8 September 2016). "Happy Birthday Asha Bhosle!". Filmfare. https://www.filmfare.com/features/happy-birthday-asha-bhosle-15482.html. பார்த்த நாள்: 4 February 2019.
- ↑ Devi, Mahasweta (1986). "The Wet-Nurse". In Butalia, Urvashi (ed.). Inner Line: The Zubaan Book of Stories by Indian Women. Zubaan, 2006. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788189013776. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.
- ↑ Yarrow, Ralph (2012). Indian Theatre: Theatre of Origin, Theatre of Freedom. Routledge. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136778759.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help)