சனா கான் (நடிகை)
சனா கான் (Sana Khan) ஓர் இந்திய நடிகை, விளம்பர மங்கை, மற்றும் நடனக்கலைஞரும் ஆவார்.[3][4] கான் முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பரப் படங்களில் நடித்துத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் சிறப்புத் தோற்றமாக நடனக் காட்சிகளில் மட்டும் நடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி மெய் நிகழ்வுத் தெடார்களிலும் தோன்றியுள்ளார். இவர் 5 மொழிகளைச் சார்ந்த 14 திரைப்படங்களிலும், 50 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.[3] இந்தியில் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார்.[5]
சனா கான் | |
---|---|
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற அயல்வாழ் இந்தியர் விருது வழங்கும் விழாவில் கான் | |
பிறப்பு | 21 ஆகத்து 1988[1][2] மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை, விளம்பர மாதிரி, நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2005 முதல் தற்போது வரை |
தொடக்க கால வாழ்க்கை
தொகுசனா கான் மும்பையில் பிறந்து வளர்ந்தார். அவரது தந்தை இசுலாமிய மதத்தைச் சார்ந்த மலையாளி ஆவார். இவர் கன்னூரைச் சார்ந்தவர். சனா கானுடைய தாய் சாயிடா மும்பையைச் சார்ந்தவர்.[6] கான் தனது மேல்நிலைக் கல்வியை மும்பையில் முடித்தார். இளம் வயதிலேயே விளம்பரத் துறையில் நடிக்க வந்து விட்டதால் அவர் அதற்குப் பின் தனது கல்வியைத் தொடரவில்லை.
தொழில் வாழ்க்கை
தொகுதிரைப்படங்கள்
தொகுகான் திரைத்துறையில் நடிகையாக குறைந்த பட்ஜெட் பாலிவுட் படமான யே ஹி ஹை ஹை சொசைட்டி, என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மார்ச் 2005 இல் திரைக்கு வந்தது.[7] தொடர்ச்சியாக தொலைக்காட்சி விளம்பரங்களிலும், விளம்பரப் படங்களிலும் தோன்றத் தொடங்கினார். கானின் முதல் தமிழகத் திரைப்படத்துறையில் லட்சுமி மூவி மேக்கர்சால் தயாரிக்கப்பட்ட சிலம்பாட்டம் திரைப்படத்தில் அறிமுகமானார். இத்திரைப்படம் திசம்பர் 2008 ஆம் ஆண்டில் வெளியானது.[8] இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடித்த சிலம்பரசன், தனது திரைப்படமான கெட்டவன் படத்திற்காக சனா கானை ஒப்பந்தம் செய்து வைத்திருந்து பின்னர் அழைக்காமல் விட்டிருந்தார். சிலம்பரசன் சனா கானை சிலம்பாட்டம் படத்தின் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அழைத்திருந்தார்.[6] சனா கான், தி இந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், சிலம்பரசன் ”சிலம்பாட்டம்” திரைப்படத்திற்காக புதுமுக நடிகையைத் தேடி மும்பை வந்திருந்த போது தன்னைப் பார்த்து தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்திருந்தார். மேலும், தமிழ் திரைத்துறையில் தான் பெரிய அளவில் வருவதற்குக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் என்பதைத் தான் அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.[9] சனா கான் இத்திரைப்படத்தைத் தனக்கான முதல் திருப்பமாகக் குறிப்பிடுகிறார்.[9] சனா கான் சிலம்பாட்டம் திரைப்படத்தில் அவரது கிராமிய, வாயாடியான, பிராமணப் பெண் கதாபாத்திரத்தில் (ஜானு) நடித்தமைக்காய் புகழப்பட்டார்.[6] மேலும் 2009 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ITFA சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினையும் பெற்றார்.[10][11] மார்ச் 2010 இல் அவரது அடுத்த தமிழ்ப்படமான தம்பிக்கு இந்த ஊரு திரைப்படம் வெளியானது.
அதே ஆண்டின் பிற்பகுதியில் சனா கான் நண்டமூரி கல்யாண் ராமின் ”கல்யாண்ராமின் கத்தி” திரைப்படம் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[12] 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் கோல்டன் மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ”கூல் சக்கத் ஹாட் மாகா” என்ற திரைப்படத்தின் மூலமாக கன்னடத் திரைத்துறையில் அறிமுகமானார். இவரது அடுத்த தமிழ்த் திரைப்படமான ஆயிரம் விளக்கு செப்பம்பர் 2011 இல் திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தில் கான் மதுரைப் பெண்ணாக நடித்திருந்தார்.[13] கான் மலையாளத் திரையுலகில், ”கிளைமாக்ஸ்” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் தென்னிந்திய நடிகை சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார்..[14][15][16]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Salman Khan's Mental heroine and former Bigg Boss contestant Sana Khan celebrated her 25th birthday in style at her home in Oshiwara, a north west suburb in Mumbai, on August 21".
- ↑ "Sana Khan celebrates birthday with Ajaz Khan, Rajeev Paul".
- ↑ 3.0 3.1 http://www.thehindu.com/arts/cinema/article108752.ece
- ↑ "Celeb cook in: Sana Khan".
- ↑ https://www.indiatoday.in/television/top-stories/story/bigg-boss-8-sana-khan-to-re-enter-the-house-as-a-fifth-challenger-233873-2015-01-02
- ↑ 6.0 6.1 6.2 Pillai, Sreedhar (9 November 2008). "Simbu's new girl". Times of India இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025064319/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-09/news-interviews/27900315_1_simbu-silambattam-tamil-films. பார்த்த நாள்: 27 October 2009.
- ↑ "Yehi Hai High Society". Hungama Digital Media Entertainment Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 17 November 2012.
- ↑ "Silambattam gets ready for release". The Times of India. TNN. 16 December 2008 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103125529/http://articles.timesofindia.indiatimes.com/2008-12-16/news-interviews/27897558_1_silambattam-release-film. பார்த்த நாள்: 17 November 2012.
- ↑ 9.0 9.1 Kumar, S. R. Ashok (18 February 2010). "My First Break – Sana Khan". The Hindu. http://www.thehindu.com/arts/cinema/article108752.ece. பார்த்த நாள்: 17 November 2012.
- ↑ "Bigg Boss > Contestants > Sana Khan". Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 November 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Sana Khan on aayiram vilakku Part 2". behindwoodstv (on Youtube). பார்க்கப்பட்ட நாள் 29 November 2012.
- ↑ https://www.filmibeat.com/telugu/reviews/2010/kalyanram-kathi-review-121110.html
- ↑ "Tamil " Movies " Aayiram Vilakku". One India Entertainment/Greynium Information Technologies Pvt. Ltd. Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 17.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Sana Khan as 'Silk' Smitha in Malayalam". The New Indian Express. Express Features. 16 June 2012. http://newindianexpress.com/entertainment/malayalam/article542910.ece. பார்த்த நாள்: 20 November 2012.
- ↑ "First Look: Sana Khan as Silk Smitha in Climax". Rediff.com. 16 August 2012. பார்க்கப்பட்ட நாள் 20 November 2012.
- ↑ Nayar, Parvathy S (16 February 2013). "Sana Khan moves from the Bigg Boss house to a new house!". The Times of India. TNN இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411035412/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-16/news-and-interviews/37132919_1_bigg-boss-house-khan-moves-new-house. பார்த்த நாள்: 19 February 2013.