சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி
சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | லி. சிலியடசு
|
இருசொற் பெயரீடு | |
லியோபோல்டாமிசு சிலியடசு பான்கோத்தே, 1900 | |
வேறு பெயர்கள் | |
லி. செடிகர் (இராபின்சன் & கிளாசு, 1916)[2] |
சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி (Sundaic mountain leopoldamys)( லியோபோல்டாமிசு சிலியடசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிக்கும் சிற்றினமாகும். இது முன்பு எட்வர்ட் நீண்ட வால் பெரும் எலியின் துணையினமாகக் கருதப்பட்டது.[1] மேலும் இது ஒரு ஒத்த பெயரைக் கொண்டுள்ளது: லியோபோல்டாமிசு செட்டிகர்.[2]
சுமாத்திரா, இந்தோனேசியா மற்றும் தீபகற்ப மலேசியாவின் மலைக்காடுகளில் சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி காணப்படுகிறது. பொதுவாக 1 km (0.62 mi) உயரத்திற்கு மேல் உள்ளப் பகுதிகளில் காணப்படும்.[1] இது முதன்மை மற்றும் சீரழிந்த வெப்பமண்டல ஈரமான காடுகளின் நிலப்பரப்பில் வாழும்.[1]
சன்டைக் மலை நீண்ட வால் பெரும் எலி பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பரவலாக வாழிடப் பகுதியில் காணப்படுவதாலும், இதன் எண்ணிக்கைப் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காணப்படுவதாலும், வாழ்விட மாற்றத்திற்கான சகிப்புத்தன்மையின் அளவு காரணமாக இதன் காப்பு நிலை வரையறுக்கப்பட்டது.[1] இருப்பினும், மரம், விறகு மற்றும் விவசாய நிலங்களுக்காக இதன் வாழ்விடமான காடுகள் அழிவதால், இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Aplin, K. (2016). "Leopoldamys ciliatus". IUCN Red List of Threatened Species 2016: e.T136691A22434736. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T136691A22434736.en. https://www.iucnredlist.org/species/136691/22434736. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ 2.0 2.1 Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1346. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494