சன்னாசிநல்லூர்
சன்னாசிநல்லூர் (Sannasinallur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். கடலூர் மாவட்டத்தின் எல்லையான வெள்ளாற்றின் தென்கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து இப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. 10ம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் உயர்நிலைப்பள்ளியும், தபால் நிலையமும் உள்ளது. பச்சை அம்மன் கோயில் மற்றும் செம்மலையப்பர் கோயிலும், பெயர் பெற்ற சில கோயில்கள் உள்ளன. ஆற்றின் குறுக்கே, புகழ்பெற்ற திருவட்டத்துறை (திருநெல்வாயல் அறத்துறை என்றும் அழைக்கப்படுகிறது) சிவன் கோவில் உள்ளது. அருகில் இரண்டு சீமைக்காரை தொழிற்சாலைகள் உள்ளன. மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் சாலை மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் 70 கிமீ தொலைவில் உள்ளது.
சன்னாசிநல்லூர் Sannasinallur | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | அரியலூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 3,554 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 621730 |
வாகனப் பதிவு | TN-46 |
Coastline | 90 கிலோமீட்டர்கள் (56 mi) |
அருகிலுள்ள நகரம் | திட்டக்குடு, விருதாச்சலம் |
பாலின விகிதம் | 1076 ♂/♀ |
கல்வியறிவு | 54.71% |
சட்டமன்றத் தொகுதி | குன்னம் |
மக்கள்தொகை
தொகு2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சன்னாசிநல்லூரில் 1712 ஆண்கள் மற்றும் 1842 பெண்கள் என மொத்தம் 3554 பேர் இருந்தனர்.[1]