சபினா யாஸ்மின்

இந்திய அரசியல்வாதி

சபீனா யாஸ்மின் (Sabina Yeasmin) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேற்கு வங்க அரசாங்கத்தில் நீர் பாசனம், நீர்வழிகள் மற்றும் வட வங்காள மேம்பாட்டுதுறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மேற்கு வங்காள சட்டமன்றத்தில் மோத்தாபரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சபீனா யாஸ்மின்
மம்தா பேனர்ஜியின் மூன்றாவது அமைச்சரவை, மேற்கு வங்காள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மே 2021
ஆளுநர்ஜெகதீப் தங்கர்
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
அமைச்சரவை
  • நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழிகள்
  • வட வங்காள வளர்ச்சி
பதவியில்
மே 20, 2011 – செப்டம்பர் 2012
ஆளுநர்எம். கே. நாராயணன்
முதலமைச்சர்மம்தா பானர்ஜி
அமைச்சரவை
  • பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் காவல்துறை
பின்னவர்மம்தா பானர்ஜி
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 13, 2011
தொகுதிமோத்தாபரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புparty enx அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (தற்போது வரை)
1978
மால்டா, மேற்கு வங்காளம் ,இந்தியா
இறப்புparty enx அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (தற்போது வரை)
இளைப்பாறுமிடம்party enx அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (தற்போது வரை)
தேசியம் இந்தியா
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்2 (1.விசா பிந்தே ஆலம் 2. நௌரின் பிந்தே ஆலம்
பெற்றோர்
வாழிடம்(s)கராரி சந்த்பூர், மால்டா
கல்விகௌர் மகாவித்யாலயா, இளங்கலை (கௌரவப் பட்டம்)
முன்னாள் கல்லூரிவட வங்காள பல்கலைக்கழகம்

அரசியல் வாழ்க்கை தொகு

மேற்கு வங்க அரசாங்கத்தில் மம்தா பானர்ஜியின் முதல் அமைச்சரவையில் முதல் முஸ்லிம் பெண் அமைச்சராக இருந்தார்.[3][4][5] இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதி ஏ. பி. பி. கானி கான் சவுத்ரி என்பவரின் மருமகள் செக்னாஸ் குவாதரி ஒரு சுயேடசை வேட்பாளராக போட்டியிட்டதால், மோத்தாபரியிலிருந்து சபீனா யாஸ்மின் வெற்றி எளிதாக இருந்தது.[6] மேற்கு வங்க சட்டசபைக்குத் தேர்தெடுக்கப்பட்ட ஏழு முஸ்லிம் பெண் சட்டமன்ற உறூபினர்களில் இவரும் ஒருவர். மம்தா பானர்ஜியின் அரசாங்கத்திலிருந்து வெளியேற காங்கிரஸ் கட்சி முடிவு செய்தபோது இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2018இல் திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.[7]

மாவட்ட பரிசத் தொகு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு மால்டா மாவட்ட பரிசத்தின் தலைவரானார். 2008 ஆம் ஆண்டில், காளியாச்சக் மால்டா ஜில்லா பரிஷத்தில் ஒரு இடத்தையும் வென்றார்.[8]

சொந்த வாழ்க்கை தொகு

இவர் 2000 ஆம் ஆண்டில் கௌர் மகாவித்யாலயாவில் இளங்கலை பட்டமும், 2002 ஆம் ஆண்டில் வட வங்க பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Details and Information about Sabina Yeasmin". www.nocorruption.in. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  2. "Winner Candidate of West Bengal legislative assembly from Malda". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 6 December 2018.
  3. "Ministers in Mamata's Cabinet". மேற்கு வங்காள அரசு. 21 May 2011. Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
  4. Mamata allots portfolios, keeps key ministries
  5. All the Didi's men
  6. "Muslim Voters Select Mamata in Bengal – Muslim representation reaches 20 per cent in West Bengal Assembly elections". The Eastern Post. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Former BJP MP Chandan Mitra joins Mamata Banerjee's Trinamool Congress". Deccan Chronicle 21 July 2018. 21 July 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
  8. 8.0 8.1 "Sabina Yasmin becomes first Muslim woman minister in West Bengal". Two Circles.net. 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 6 July 2014.

வெளி இணைப்புகள் தொகு

  வெளி ஒளிதங்கள்
  Sabina Yeasmin at Sujapur meeting 2013

டுவிட்டரில் சபினா யாஸ்மின்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபினா_யாஸ்மின்&oldid=3926327" இலிருந்து மீள்விக்கப்பட்டது