சப்பானிய அணில்
சப்பானிய அணில் (Japanese squirrel)(சையூரசு லிசு) என்பது சப்பானைச் சேர்ந்த சையூரசு பேரினத்தைச் சேர்ந்த மர அணில் சிற்றினம் ஆகும். இதனை 1844-ல் இடச்சு விலங்கியல் நிபுணர் கோயன்ராட் ஜேக்கப் தெம்மின்க் விவரித்தார்.
சப்பானிய அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. lis
|
இருசொற் பெயரீடு | |
Sciurus lis Temminck, 1844[2] | |
Japanese squirrel's range |
வாழிடமும் நிலையும்
தொகுசப்பானிய அணில் ஒன்சூ, சிகொக்கு மற்றும் கியூஷூ தீவுகளில் காணப்படுகின்றது. சமீபத்தில், தென்மேற்கு ஒன்சூ மற்றும் சிகொக்கு தீவுகளில் இதன் எண்ணிக்கை குறைந்தது. இந்த சிற்றினத்தின் அழிவுக் காரணிகளில் ஒன்று மனிதர்களால் காடுகள் அழிக்கப்பட்டு வாழிடத் துண்டாக்கம் ஆகும்.
உணவு
தொகுசில பகுதிகளில், சப்பானிய அணிலின் உணவில் 35% வரை அக்ரூட் பருப்பு உள்ளது. சப்பானிய அணில் இருக்கும் பகுதிகளில் சப்பானிய அக்ருட் விதைப் பரவல் தடைப்பட்டு இருக்கலாம்.[3][4] மேலும், சப்பானிய அக்ரூட் ஜ்கலான்சு அய்லாதிபோலியா) சப்பானில் உள்ள தாழ் நில கலப்பு இன காடுகளில் உள்ள சப்பானிய அணில்களுக்கு முக்கியமான உணவாகும். சப்பானிய அணில்கள் அக்ரூட் பருப்பின் கடினமான ஓட்டைக் கடித்து, ஓட்டின் மடிப்பினை பிளந்து, பற்களைப் பிளவுக்குள் உட்பொதித்து, இரண்டு பகுதிகளாகப் பிரித்து உண்ணுகின்றது. முழு அக்ரூட் பருப்பினை சாப்பிட்டு முடிப்பதற்கான நேரத்தை இம்முறை குறைப்பதால் இந்த உத்தி திறமையானதாகத் தெரிகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ishii, N.; Kaneko, Y. (2008). "Sciurus lis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/20014/0. பார்த்த நாள்: 6 January 2009.
- ↑ Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Sciurus (Sciurus) lis". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. இணையக் கணினி நூலக மைய எண் 26158608.
- ↑ 3.0 3.1 Tamura, Noriko.
- ↑ Tamura, N. and Hayashi, F. (2008), Geographic variation in walnut seed size correlates with hoarding behaviour of two rodent species.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Sciurus lis பற்றிய ஊடகங்கள்