சம்பாகுளம் பச்சு பிள்ளை
சம்பகுளம் பச்சு பிள்ளை (Champakulam Pachu Pillai) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த ஒரு கதகளி விரிவுரையாளர் ஆவார். இவர் கதகளியில் தாடியுள்ள வேடங்களில் நிபுணராக இருந்தார். [1] சங்கீத நாடக அகாடமி விருது 1983, கேரள சங்கீத நாடக அகாடமி விருது 1969 மற்றும் கேரள கலாமண்டலம் விருது 1991 உட்பட பல குறிப்பிடத்தக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.
சம்பாகுளம் பச்சு பிள்ளை Champakulam Pachu Pillai | |
---|---|
பிறப்பு | 1907 சம்பாகுளம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | மே 10, 2004 |
தேசியம் | இந்தியர் |
பணி | கதகளி கலைஞர் |
பெற்றோர் | கைப்பிள்ளை சங்கரபிள்ளை, மாதவியம்மா |
விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது, கேரள மாநில கதகளி விருது, கேரள சங்கீத நாடக அகாதமி விருதும் உறுப்பினர் விருதும் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபச்சு பிள்ளை கேரளாவில் உள்ள ஆலப்புழை மாவட்டம் சம்பாகுளம் கிராமத்தில் இருந்த பெருமனூர் குடும்பத்தில் கைப்பிள்ளை சங்கரப்பிள்ளா மற்றும் மாதவியம்மா தம்பதியருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு பிறந்தார்.[2] தென் சிட்டா என்று அழைக்கப்படும் கப்ளிஞ்செடல் கதகளிச்சிட்டாவின் முக்கிய வம்சாவளியில் ஒன்று பெருமானூர் குடும்பம் ஆகும்.[2] பிரபல நடனக் கலைஞரும் நடன இயக்குனருமான குரு கோபிநாத் இவரது இளைய சகோதரர் ஆவார். [2] பச்சு பிள்ளை தனது 14 ஆவது வயதில் தாய் மாமா சம்பகுளம் சங்கு பிள்ளையிடம் கதகளி கற்கத் தொடங்கினார். இவர் தனது 16 ஆவது வயதில் நெடுமுடி மாத்தூர் பகவதி கோவிலில் ருக்மணிசுயம்வரம் கதகளி நிகழ்ச்சியில் ருக்மனாக அறிமுகமானார். [2] குருவின் விருப்பப்படி, பச்சு பிள்ளை மாத்தூர் கதகளி யோகத்தில் சேர்ந்தார், அதில் இவரும் உறுப்பினராக இருந்தார். [2] 1993 ஆம் ஆண்டு தில்லியில் சங்கீத நாடக அகாடமி நடத்திய கதகளி விழாவை பச்சு பிள்ளை துவக்கி வைத்தார். [2]
பச்சு பிள்ளையின் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் துச்சாதனன், வாலி, திரிகர்தன் பகன், காளி மற்றும் நக்ரதுண்டி போன்ற முரட்டுத்தனமான மற்றும் வீரமான பாத்திரங்கள் போன்றவையும் அடங்கும். [2]
பச்சு பிள்ளை மே 10, 2004 அன்று தனது 98 ஆவது வயதில் இறந்தார்.
விருதுகள்
தொகு- கேரள சங்கீத நாடக அகாடமி விருது 1969 [3]
- கேரள கலாமண்டலம் விருது 1991 [3]
- சங்கீத நாடக அகாடமி விருது 1983.[2]
- கேரள சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் [2]
- கேரள கலாமண்டலம் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் தங்கப் பதக்கம் [2]
- திருநாள் மகாராணி மற்றும் சித்திர திருநாள் மகாராசா போன்ற திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் பச்சுப்பிள்ளை கௌரவிக்கப்பட்டார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lal, Ananda (2004). "Pillai, Champakulam Pachu". The Oxford Companion to Indian Theatre (in ஆங்கிலம்). Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0493.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 MOHAN, T. SASI. "താടി വേഷത്തിന്റെ കരുത്ത്:ചമ്പക്കുളം". malayalam.webdunia.com (in மலையாளம்).
- ↑ 3.0 3.1 "Biography of Eminent Nairs". www.nairs.in.