சம்பொவாங்கோ டெல் நோர்டே

சம்பொவாங்கோ டெல் நோர்டே (Zamboanga_del_Norte) என்பது பிலிப்பீன்சின் மின்டனாவுப் பகுதியில், சம்பொவாங்கா தீபகற்பம் பிராந்தியத்தில் அமைந்துள்ள மூன்று மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் டொபோலொக் ஆகும். இம்மாகாணம் 1635 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரொபேடோ யை. உயை (Roberto Y. Uy) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 7,301.53 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தின் சனத்தொகை 1,011,393 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 9ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 26ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 691 கிராமங்களும், 25 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகானத்தின் அதிகூடிய கடல் மட்டத்திலிருந்தான உயரம் 243.8 மீற்றர்கள் ஆகும். மேலும் கடிபுனன் என்பதே இம்மாகானத்தில் அமைந்துள்ள உயரமான உச்சி ஆகும்.

சம்பொவாங்கோ டெல் நோர்டே
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்சம்பொவாங்கா தீபகற்பம்
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு

அதிகாரபூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2012-11-27 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பொவாங்கோ_டெல்_நோர்டே&oldid=3929604" இலிருந்து மீள்விக்கப்பட்டது