சம்யுக்தா எக்டே

தென்னிந்திய நடிகை

சம்யுக்தா ஹெக்டே (பிறப்பு 17 சூலை 1998) [1] என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவ்ர். இவர் குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் நடிக்கிறார். இவர் ரிஷாப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக ஆர்யா என்ற பாத்திரத்தில் நடித்தார், இதற்காக கன்னடத்தின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சம்யுக்தா எக்டே
பிறப்பு17 சூலை 1998 (1998-07-17) (அகவை 25)
இந்திய ஒன்றியம், கருநாடகம், பெங்களூர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது வரை

எம்டிவி ரோடீஸ், பிக் பாஸ் கன்னடம் (2017) எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா ஆகிய உண்மைநிலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொகு

சம்யுக்தா பெங்களூரில் ஒரு இந்து அவ்யக பிராமண தந்தைக்கும், கத்தோலிக்க தாய்க்கும் பிறந்தார்.[2] இவரது சொந்த கிராமமானது வடகன்னட மாவட்டத்தில் உள்ள கெலகினமனே ஆகும். புனித பால்ஸ் ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார். ஸ்ரீ பகவன் மகாவீர் ஜெயின் கல்லூரியில் இளங்கலை உளவியல் மற்றும் இதழியல் படித்துவந்த நிலையில் தனது பட்டப்படிப்பை நிறுத்திவிட்டு, நடனத்ததையும், நடிப்பையும் தொடர்ந்தார்.[3]

தொழில் தொகு

2016 ஆம் ஆண்டில், தன் 17வது வயதில், ரக்சித் செட்டியின் நகைச்சுவை-நாடகப் படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, வணிக ரீதியான பெரிய வெற்றியையும் பெற்றது.[4]

2016 ஆம் ஆண்டில், எம்டிவி ரோடீஸ் என்ற என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எக்டே ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தனது குழந்தை பருவ கனவு என்று இவர் கூறினார்.[5]

2018 அக்டோபரில், எக்டே எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லாவில் அதன் பதினொன்றாவது பருவத்தில் ஒரு வைல்ட் கார்டு நுழைவு மூலம் நுழைந்து இரண்டாவது இடம் பெற்றார்.[சான்று தேவை]

திரைப்படவியல் தொகு

விசை
  இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள் Ref.
2016 கிரிக் பார்ட்டி டி. ஆர்யா கன்னடம் அறிமுக படம் [6]
2017 காலேஜ் குமார் கீர்த்தி [7]
2018 கிர்ராக் பார்ட்டி சத்யா தெலுங்கு தெலுங்கில் அறிமுகம் [8]
2019 வாட்ச்மேன் அனிதா தமிழ் தமிழில் அறிமுகம்
ஓம் நிஷ்யப்தா ஓம் யுதா காது கேளாத பெண் கன்னடம் [9]
கோமாளி நிகிதா கிருஷ்ணமூர்த்தி தமிழ்
பப்பி ரம்யா
2021 தியல் படப்பிடிப்பில்
துர்த்து நிர்கமனா கன்னடம் தயாரிப்பிற்குப்பிந்தைய பணியில்

தொலைக்காட்சி தொகு

ஆண்டு நிகழ்ச்சி பங்கு அலைவரிசை குறிப்புகள் Ref
2017 எம்டிவி ரோடீஸ் 15 பங்கேற்பாளர் எம்டிவி இந்தியா [5]
பிக் பாஸ் கன்னடம் 5 கலர்ஸ் கன்னடம் வெளியேற்றப்பட்ட, நாள் 66 [10]
2018 எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 11 எம்டிவி இந்தியா வைல்ட் கார்டு நுழைவு இறுதிவரை

விருதுகள் மற்றும் பரிந்துரைகள் தொகு

ஆண்டு விருது பரிந்துரைக்கப்பட்டது வகை முடிவு Ref.
2017 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் கிரிக் பார்ட்டி சிறந்த துணை நடிகை வெற்றி [11]
2017 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பரிந்துரை [12]

குறிப்புகள் தொகு

 

  1. "Samyuktha Hegde spent her 22nd birthday in an estate". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 July 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/samyuktha-hegde-spent-her-22nd-birthday-in-an-estate/articleshow/77033179.cms. பார்த்த நாள்: 18 July 2020. 
  2. "Such a Kirik Party!". 29 June 2016. http://www.deccanchronicle.com/entertainment/sandalwood/290616/such-a-kirik-party.html. பார்த்த நாள்: 23 February 2017. 
  3. "Samyuktha Hegde Biography, Samyuktha Hegde Profile". Filmibeat. 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
  4. Prasad S, Shyam (2017-02-04). "'Kirk Party' set to become the third Kannada film in the Rs 50 crore club" – via bangaloremirror.indiatimes.com.
  5. 5.0 5.1 Agarwal, Stuti (2017-02-25). "Kirik Party actress in MTV Roadies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/kirik-party-actress-in-mtv-roadies/articleshow/57327795.cms. 
  6. Daithota, Madhu (2017-01-24). "Two new women in Rakshit Shetty's life". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Two-new-women-in-Rakshit-Shetty's-life/articleshow/51731656.cms. பார்த்த நாள்: 2020-10-25. 
  7. "Samyuktha Hegde on a signing spree". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2017-04-17. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/samyuktha-hegde-on-a-signing-spree/articleshow/58218795.cms. 
  8. Shajini S R (2017-12-13). "Nikhil's 'Kirrak Party' nears completion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/nikhils-kirrak-party-nears-completion/articleshow/62055803.cms. 
  9. "Omme Nishabda Omme Yuddha Movie (2019)". in.bookmyshow.com. Bookmyshow. 31 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-10-25.
  10. "Samyuktha Hegde enters the Kannada 'Bigg Boss' House". தி நியூஸ் மினிட். 2017-12-15.
  11. "Winners: 64th Jio Filmfare Awards 2017 (South)". 19 June 2017.
  12. "SIIMA awards 2017 nominations announced". Sify.com. Archived from the original on 2017-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்யுக்தா_எக்டே&oldid=3743569" இலிருந்து மீள்விக்கப்பட்டது