சயனூரிக் புளோரைடு

வேதிச்சேர்மம்

சயனூரிக் புளோரைடு (Cyanuric fluoride or 2,4,6-trifluoro-1,3,5-triazine) C3F3N3 என்ற வேதியியல் வாய்ப்பாடும் (CNF)3 என்ற கட்டமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். 2,4,6-டிரைபுளோரோ-1,3,5-டிரையசீன் அல்லது 2,4,6-முப்புளோரோ-1,3,5-மூவசீன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. நிறமற்று, காரச்சுவை கொண்ட ஒரு நீர்மமாக சயனூரிக் புளோரைடு காணப்படுகிறது. இழை-வினை சாயங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக நொதிகளின் எச்சமாகக் காணப்படும் டைரோசின் தயாரிப்பில் தனித்துவமிக்க வினையாக்கியாகவும், புளோரினேற்றும் முகவராகவும் இது பயன்படுகிறது [1].

சயனூரிக் புளோரைடு
Skeletal formula of cyanuric fluoride
Space-filling model of the cyanuric fluoride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,4,6-டிரைபுளோரோ-1,3,5-டிரையசீன்
வேறு பெயர்கள்
முப்புளோரோமூவசீன்,
2,4,6-டிரைபுளோரோ-எசு-டிரையசீன்,
சயனூரைல் புளோரைடு
இனங்காட்டிகள்
675-14-9 Y
ChemSpider 12143 Y
InChI
  • InChI=1S/C3F3N3/c4-1-7-2(5)9-3(6)8-1 Y
    Key: VMKJWLXVLHBJNK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3F3N3/c4-1-7-2(5)9-3(6)8-1
    Key: VMKJWLXVLHBJNK-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12664
  • Fc1nc(F)nc(F)n1
பண்புகள்
C3F3N3
வாய்ப்பாட்டு எடை 135.047 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.574 கி/செ.மீ3
உருகுநிலை −38 °C (−36 °F; 235 K)
கொதிநிலை 74 °C (165 °F; 347 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R24, R26, R35
S-சொற்றொடர்கள் S26, S28, S36/37/39, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அமெரிக்காவின் அவசரநிலை திட்டமிடல் மற்றும் சமூக தகவலறியும் உரிமைச் சட்டம், பிரிவு 302 இன் படி இச்சேர்மத்தை மிகவும் அபாயகரமான பொருள் என வகைப்படுத்தப்படுத்தியுள்ளது. உற்பத்திக்கான தேவைகள், உற்பத்திக்கும், சேமித்து வைப்பதற்குமான பாதுகாப்பு வசதிகள், குறிப்பிடத்தக்க அளவில் இதை பயன்படுத்துவதற்கான அவசியங்கள் முதலான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே உற்பத்தி செய்யவேண்டுமென்ற கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது [2].

தயாரிப்பும் வினைகளும்

தொகு

சயனூரிக் குளோரைடு புளோரினேற்றம் செய்யப்பட்டு சயனூரிக் புளோரைடு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் புளோரினேற்றும் முகவராக SbF3Cl2,[3] KSO2F,[4] or NaF.[5][6] பயன்படுத்தப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலங்களை மிதமாகவும் நேரடியாகவும் அசைல் புளோரைடுகளாக மாற்றும் செயல்முறையில் சயனூரிக் புளோரைடு பயன்படுத்தப்படுகிறது :[7]

 .

பிற புளோரினேற்றும் தயாரிப்பு முறைகள் நேரடியான தயாரிப்புக்கு சற்று விலகியும், சில செயல்பாட்டு குழுக்களுடன் இயைந்து போகாமலும் இருக்கின்றன .[8].

சயனூரிக் புளோரைடு எளிதில் சயனூரிக் அமிலமாக நீராற்பகுப்பு அடைகிறது. சயனூரிக் குளோரைடைக் காட்டிலும் மின்னணு மிகுபொருட்களுடன் விரைவாக வினைபுரிகிறது[4] .1300 பாகை செல்சியசு வெப்பநிலையில் சயனூரிக் புளோரைடு வெப்பச் சிதைவு அடைவதால் சயனோசன் புளோரைடு தயாரிப்பதற்கான வழியைத் தருகிறது [9]

(CNF)3 → 3 CNF.

மேற்கோள்கள்

தொகு
  1. "Fluorinated aromatic compounds". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology 11. (1994). Wiley-Interscience. 608. 
  2. 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (July 1, 2008 ). Government Printing Office. http://edocket.access.gpo.gov/cfr_2008/julqtr/pdf/40cfr355AppA.pdf. பார்த்த நாள்: October 29, 2011. 
  3. Abe F. Maxwell; John S. Fry; Lucius A. Bigelow (1958). "The Indirect Fluorination of Cyanuric Chloride". Journal of the American Chemical Society 80 (3): 548–549. doi:10.1021/ja01536a010. 
  4. 4.0 4.1 Daniel W. Grisley, Jr; E. W. Gluesenkamp; S. Allen Heininger (1958). "Reactions of Nucleophilic Reagents with Cyanuric Fluoride and Cyanuric Chloride". Journal of Organic Chemistry 23 (11): 1802–1804. doi:10.1021/jo01105a620. 
  5. C. W. Tullock; D. D. Coffman (1960). "Synthesis of Fluorides by Metathesis with Sodium Fluoride". Journal of Organic Chemistry 25 (11): 2016–2019. doi:10.1021/jo01081a050. 
  6. Steffen Groß; Stephan Laabs; Andreas Scherrmann; Alexander Sudau; Nong Zhang; Udo Nubbemeyer (2000). "Improved Syntheses of Cyanuric Fluoride and Carboxylic Acid Fluorides". Journal für Praktische Chemie 342 (7): 711–714. doi:10.1002/1521-3897(200009)342:7<711::AID-PRAC711>3.0.CO;2-M. 
  7. George A. Olah; Masatomo Nojima; Istvan Kerekes (1973). "Synthetic Methods and Reactions; IV. Fluorination of Carboxylic Acids with Cyanuric Fluoride". Synthesis 1973 (08): 487–488. doi:10.1055/s-1973-22238. 
  8. "Cyanuric Fluoride". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2005). John Wiley & Sons. 77. DOI:10.1002/047084289X.rn00043. 
  9. F. S. Fawcett; R. D. Lipscomb (1964). "Cyanogen Fluoride: Synthesis and Properties". Journal of the American Chemical Society 86 (13): 2576–2579. doi:10.1021/ja01067a011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனூரிக்_புளோரைடு&oldid=2581928" இலிருந்து மீள்விக்கப்பட்டது