சரபபுரிய வம்சம்

இந்தியாவின் கிழக்குப் பகுதியை ஆண்ட பண்டைய வம்சம்

சரபபுரிய வம்சம் (Sharabhapuriya dynasty) என்பது 5 - 6 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் இன்றைய சத்தீசுகர் மற்றும் ஒடிசா பகுதிகளை ஆண்ட ஒரு வம்சமாகும். இந்த வம்சம் அவர்களின் ஆரம்ப நாட்களில் குப்த ஆட்சியாளர்களாக சேவை செய்திருக்கலாம். ஆனால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்ததால் நடைமுறையில் சுதந்திரமாக மாறியது. சரபபுரியர்களுக்குப் பின் பாண்டுவம்சிகள் ஆட்சி செய்தனர். செப்புத் தகடு கல்வெட்டுகளிலிருந்தும் வம்சத்தைப் பற்றிய தகவல் அறியப்படுகிறது.

தெற்கு கோசலத்தின் சரபபுரியர்கள்
5வது நூற்றாண்டு–6வது நூற்றாண்டு
Map
சரபபுரியக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள இடங்கள்
நிலைஇராச்சியம்
தலைநகரம்சரபபுரம், சிறீபுரம்
சமயம்
வைணவ சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
5வது நூற்றாண்டு
• முடிவு
6வது நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
குப்தப் பேரரசு
நள பேரரசு
பர்வதத்வாரக வம்சம்
தெற்கு கோலத்தின் பாண்டுவம்சிகள்
தற்போதைய பகுதிகள்இந்தியா

பெயர்

தொகு

வம்சத்தின் சுய-பெயர் தெரியவில்லை: வரலாற்றாசிரியர்கள் குடும்பத்தை சரபபுரியர்கள் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் வம்சத்தின் பெரும்பாலான கல்வெட்டுகள் சரபபுரம் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்டது.[1]வியாக்ரராசன் என்ற ஆட்சியாளரின் மல்கர் கல்வெட்டின் அடிப்படையில் வம்சம் 'அமரர்யகுலம்' என்று அழைக்கப்பட்டது என்று வரலாற்றாலார் டி.சி.சர்கார் கருதினார். இருப்பினும், ஏ. எம். சாஸ்திரி இந்த கோட்பாட்டை மறுத்தார். வியாக்ரராசன் சரபபுரிய வம்சத்துடன் தொடர்புடையவர் அல்ல என்று வாதிட்டார். [2]

பிரதேசம்

தொகு

வம்சத்தின் பெரும்பாலான மானியங்கள் வரலாற்று தெற்கு கோசலம் பகுதியில் உள்ள மல்கர், இராய்பூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டன. இந்த கல்வெட்டுகள் சரபபுரம், சிறீபுரம் ஆகிய இடங்களிலிருந்து வெளியிடப்பட்டது. சரபபுரத்தின் அடையாளம் உறுதியாகத் தெரியவில்லை. அதே சமயம் சிறீபுரம் நவீன சிர்பூருடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. [3] சில அறிஞர்கள் சரபபுரத்தை இன்றைய ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள இடங்களுடன் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் இந்த இடங்கள் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. இன்றைய இராய்ப்பூர் மாவட்டத்தில் அல்லது அதைச் சுற்றி சரபபுரம் அமைந்திருக்கலாம்.[4] கே. டி. பாஜ்பாய், எஸ்.கே. பாண்டே ஆகியோர் சரபபுரத்தை மல்கருடன் அடையாளப்படுத்தினர். ஆனால் ஏ. எம். சாஸ்திரி மல்கரில் உள்ள அகழ்வாராய்ச்சிகள் நகரம் நிறுவப்பட்டதை பொ.ச.1000 அல்லது அதற்கு முந்தையது. எனவே, ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட சரபாவால் நிறுவப்பட்ட நகரமாக இதை அடையாளம் காண முடியாது. மேலும், மல்கர், சரபபுரம் என்று அழைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை: அதன் ஆரம்பகால பெயர் மல்லாலா அல்லது மல்லால-பட்டனம் என இருந்தது. [5] சரபபுரம் என்பது சிறீபுரத்தின் மற்றொரு பெயர் என்று வரலாற்று அறிஞர் ஹிரா லால் ஒருமுறை கருதினார். ஆனால் இந்தக் கோட்பாடு இப்போது மதிப்பிழந்துவிட்டது. [5]

சரபபுரம், வம்சத்தின் அசல் தலைநகராக சிறீபுரத்தை நிறுவி அந்த நகரத்தை தனது இரண்டாவது தலைநகராக ஆக்கினார் என்று ஏ.எம். சாஸ்திரி கோட்பாடு கூறுகிறார்; அவரது வாரிசான பிரவரராசா இராச்சியத்தின் தலைநகரை சிறீபுரத்துக்கு மாற்றினார். [6]

வரலாறு

தொகு

ஒரு சில கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் மூலம் மட்டுமே வம்சம் அறியப்படுகிறது. கல்வெட்டுகள் மானியங்களைப் பதிவு செய்துள்ளன. மேலும் வம்சத்தின் வரலாற்றைப் பற்றிய அதிக தகவல்களை வழங்கவில்லை, இருப்பினும் கல்வெட்டுகளில் உள்ள சில முத்திரைகள் ஒரு சுருக்கமான மரபியலை வழங்குகின்றன. இதன் காரணமாக, சரபபுரிய காலவரிசையின் மறுசீரமைப்பு கடினமாக உள்ளது. குப்த மன்னன் சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டு, கோசலத்தின் ஆட்சியாளனாக இருந்த ஒரு மகேந்திரனை அவர் தோற்கடித்ததாகக் கூறுகிறது. ஒரு கோட்பாடு இந்த மகேந்திரனை சரபபுரிய ஆட்சியாளராக அடையாளப்படுத்துகிறது. இருப்பினும், இந்த கோட்பாட்டிற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. [7]

சரபன்

தொகு

மிகவும் பழமையான மன்னரான சரபன், வம்சத்தின் உறுப்பினராகக் கருதப்படுகிறார். இவரது மகன் நரேந்திரனின் இரண்டு கல்வெட்டுகளிலிருந்து சரபபுர நகரத்தை (மற்றும் அநேகமாக வம்சத்தை) நிறுவினார் என்று தெரிவிக்கிறது. [2] இராய்ப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அவரது பிரதேசத்தில் பெரும்பாலும் அடங்கும். [8]

பொ.ச.510 எரான் கல்வெட்டு ஒரு சரப மன்னன் ஒரு போரில் இறந்த ஒரு கோபராசாவின் தாய்வழி தாத்தா என்று குறிப்பிடுகிறது. இந்த சரபராசாவை சரபபுரிய மன்னன் சரபனுடன் அடையாளப்படுத்தியதன் அடிப்படையில், ஏ.எம். சாஸ்திரி இவரது ஆட்சியை பொ.ச. 475–500 என வரையருக்கிறார்.[9] இந்த மதிப்பீடானது பழங்கால சான்றுகளாலும் ஆதரிக்கப்படுகிறது: சரபபுரிய கல்வெட்டுகளின் 'பெட்டி-தலை' எழுத்துக்கள் பொ.ச.500-இல் முடிவடைந்த வாகடகாசின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட ஒத்த எழுத்துக்களின் மேம்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. [5]

சரபாவின் மகன் நரேந்திரனின் குருத் கல்வெட்டு, ஒரு பிராமணருக்கு 'பரம-பட்டாரகர்' என்பவரால் நன்கொடை வழங்கப்பட்டபோது கங்கை நதியில் குளித்த பிறகு புதுப்பிக்கப்பட்டதை பதிவு செய்கிறது. அசல் மானியம் பனை ஓலைகளில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவை தீயில் அழிக்கப்பட்டன. [10] ஏ. எம். சாஸ்திரி பரம-பட்டாரகனை ஒரு குப்த பேரரசருடன் அடையாளப்படுத்துகிறார் (குப்தர்களின் தலைநகரான பாடலிபுத்திரம் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்தது). நரேந்திரனின் சரபா ஒரு குப்த ஆட்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்று அவர் கருதுகிறார். [11]

நரேந்திரன்

தொகு

சரபனின் மகன் நரேந்திரன், வம்சத்தின் ஆரம்பகால மானியத்தை வழங்கினார். [12] அவரது குருத் கல்வெட்டு, இவர் 'பரம-பட்டாரகன்' என்றத் தகுதிக்காக வழங்கிய மானியத்தை புதுப்பித்ததாகக் கூறுகிறது. இவர் தனது ஆட்சியின் 24வது ஆண்டு வரை குப்தர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து ஒப்புக்கொண்டார் என்று இது அறிவுறுத்துகிறது. [8] கல்வெட்டு மேலாளரின் பெயரைத் தவிர்த்துவிட்டதால், இவர் நடைமுறையில் சுதந்திரமாக இருந்தார் எனத் தெரிகிறாது. மேலும் குப்த மேலாதிக்கத்தை பெயரளவில் மட்டுமே ஒப்புக்கொண்டார் எனவும் தெரிகிறது. [11]

திலகேசுவரத்தில் இருந்து குருத் மானியம் வழங்கப்பட்டது. இது நரேந்திரனை விஷ்ணு பக்தராக விவரிக்கிறது. [13]

பிரசன்னா

தொகு
 
பிரசன்னாவின் நாணயம்

நரேந்திரனின் மகன் ஜெயராசா, பேரன் சுதேவராசா ஆகியோரின் முத்திரைகள் மூலம் பிரசன்னா அறியப்படுகிறார். இவரது பெயரை பிரசன்னமத்ரன் என்று குறிப்பிடும் சில பொற்காசுகள் மூலம் இவர் அறியப்படுகிறார். பொற்காசுகளின் வெளியீடு இவர் ஒரு சக்திவாய்ந்த ஆட்சியாளர் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும் இவர் பெயரளவிலான குப்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஒப்புக்கொண்டிருக்கலாம். இந்த நாணயங்களில் கருடன் நிற்கும் காட்சி, சுற்றிலும் பிறை சந்திரன், சக்கரம் மற்றும் சங்கு ஆகியவை உள்ளன. சத்தீசுகர் தவிர, ஒடிசாவின் கலஹண்டி மாவட்டம், மகாராட்டிராவின் சந்தா மாவட்டத்தில் இந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர் ஒரு விரிவான பிரதேசத்தை ஆட்சி செய்தார் என்று இது அறிவுறுத்துகிறது, இருப்பினும் இதை உறுதியாகக் கூற முடியாது. [14]

நரேந்திரனுடனான இவரது உறவு உறுதியாகத் தெரியவில்லை: இவர் நரேந்திரனின் மகனாகவோ அல்லது அவரது வழித்தோன்றலாகவோ இருக்கலாம். பிரசன்னாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: ஜெயராசா மற்றும் மனமத்ரன் (ஜெயராசாவின் வாரிசு). [5]

மற்ற அரசர்கள்

தொகு
ஜெயராசா
ஜெயராசா பிரசன்னாவின் மகன். [15] இவரது பெயருடன் மஹத் என்ற முன்னொட்டைச் சேர்த்த வம்சத்தின் முதல் ஆட்சியாளர் இவரே. இது இவரது சந்ததியினர் மட்டுமல்ல, பாண்டுவம்சிகள் மற்றும் சோமவம்சிகள் போன்ற பிற்கால வம்சங்களின் மன்னர்களாலும் பின்பற்றப்பட்டது. [16]
மனமத்ரன் என்கிற துர்கராசா
மனமத்ரன் பிரசன்னாவின் மற்றொரு மகன். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: சுதேவராசா மற்றும் பிரவரராசா (சுதேவராசாவின் வாரிசு). [5]
சுதேவராசா
சுதேவராசா மானமத்ரனின் மகன். [15] இவர் சிறீபுரத்தை நிறுவியதாகத் தெரிகிறது. அங்கு இவரது ஆட்சியின் போது ஆரம்பகால கல்வெட்டுகள் வெளியிடப்பட்டன. [5]
பிரவரராசா
மனமத்ரனின் மற்றொரு மகன் பிரவரராஜா. [15] இவர் இராச்சியத்தின் தலைநகரை சரபபுரத்திலிருந்து சிறீபுரத்திற்கு மாற்றியதாகத் தெரிகிறது. [5]

வீழ்ச்சி

தொகு

பிரவரராசாவின் வாரிசுகள் யாரைப் பற்றியும் உறுதியாக தெரியவில்லை. மல்கரில் வியாக்ரராசாவின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு பிரசன்னபுரம் என்ற நகரத்திலிருந்து வெளியிடப்பட்டது, மேலும் வியாக்ரராசாவை பிரவர-பட்டாரகரின் மகன் என்று விவரிக்கிறது. டி. சி. சர்கார் மற்றும் சிலர் வியாக்ரராசா ஒரு சரபபுரிய மன்னர் என்று கருதுகின்றனர்: பிரசன்னபுரம் அவரது மூதாதையரான பிரசன்னாவின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம். ஜெயராசாவுடன் அடையாளம் காணப்பட்ட ஒரு செய-பட்டாரகனையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. [17] அஜய் மித்ரா சாஸ்திரி இந்த கோட்பாட்டை பல அடிப்படையில் எதிர்த்தார். [18] வியாக்ரராசாவின் கல்வெட்டில் சரபபுரிய கல்வெட்டுகளின் பெட்டித் தலை எழுத்துக்களைப் போலன்றி 'ஆணி-தலை' எழுத்துக்கள் உள்ளன. அதன் முத்திரை, அதன் உரை நடை மற்றும் அதன் மானிய ஒழுங்கு ஆகியவை சரபபுரிய கல்வெட்டுகளிலிருந்து வேறுபட்டவை. [19]

சரபபுரியர்களுக்குப் பின் பாண்டுவம்சி வம்சத்தினர் ஆட்சி செய்தனர். [20] பாண்டுவம்சி கல்வெட்டுகள் சரபபுரியர்களின் மூன்று செப்புத் தகடுகளின் பாணியைப் பின்பற்றுகின்றன. [21]

மதம்

தொகு

அனைத்து சரபபுரிய மன்னர்களும் விஷ்ணுவின் பக்தர்களாக இருந்தனர். மேலும் வாசுதேவனை உயர்ந்த தெய்வமாக வழிபட்டனர். ஏகாதிபத்திய குப்தர்களைப் போலவே, இவர்களும் தங்கள் கல்வெட்டுகளில் பரம-பாகவத என்ற வைணவ அடைமொழியை ஏற்றுக்கொண்டனர். இன்றைய ஒடிசாவில் வைணவ மதம் பரவியதில் இவர்களின் ஆட்சி ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. [22]

கல்வெட்டுகள்

தொகு

சரபபுரியர்களால் வழங்கப்பட்ட 17 செப்புத் தகடு மானியக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 11 கல்வெட்டுகள் சரபபுரத்திலிருந்து வெளியிடப்பட்டவை. அவற்றின் இருப்பிடம் நிச்சயமற்றது. பெரும்பாலான பதிவுகள் இன்றைய சத்தீசுகரில் காணப்படுகின்றன. [5] நன்கொடையாளர் மற்றும் அவரது பெற்றோரின் தகுதிக்காக பிராமணர்களுக்கு நிலம் வழங்கியதை கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. [5]

நாணயம்

தொகு

பிரசன்னா அல்லது பிரசன்னமத்ரன் என்பவர் நாணயத்திலிருந்து அறியப்பட்ட வம்சத்தின் ஒரே மன்னராவார். [23] இவரது நாணயங்கள் சிர்பூரிலிருந்து (பண்டைய சிறீபுரம்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [3]

சான்றுகள்

தொகு

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபபுரிய_வம்சம்&oldid=3388899" இலிருந்து மீள்விக்கப்பட்டது