சராப்ரா
சராப்ரா (Chharabra), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சிம்லா மாவட்டத்தில் இமயமலையில் அமைந்த ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் சிம்லா நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், இமயமலையில் 8250 அடி (2514 மீட்டர்) உயரத்திலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் குடியரசுத் தலைவரின் கோடைக்கால இல்லம் அமைந்துள்ளது. ராஜ் தர்பங்கா சமஸ்தான மன்னர் காமேஷ்வரின் கோடைக்கால வாழிடமான கல்யாணி இல்லம் இக்கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் மலையேற்றப் பயிற்சிக்கு சிறந்ததாகும்.
சராப்ரா (Chharabra) | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 31°06′54″N 77°14′42″E / 31.115°N 77.245°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
ஏற்றம் | 2,514 m (8,248 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 171 012 |
வாகனப் பதிவு | HP 2, .80 & .94 |
கல்வி நிலையங்கள்
தொகுஇமயமலை பன்னாட்டுப் பள்ளி[1] தர்பங்கா சமஸ்தானம்
தங்கும் விடுதிகள்
தொகு- காட்டுப்பூ தங்கும் விடுதி
- தேவதாரு மலை தங்கும் விடுதி
- மதுபன் தங்கும் விடுதி
உணவகங்கள்
தொகு- செர் இ பஞ்சாப்
- செவ்னார்
- ரோசன் தேனீர் விடுதி