சரிதா சிங்
சரிதா சிங் என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தற்போதைய தலைவராக உள்ளார். சிங் தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் தில்லியின் ரோத்தாஸ் சட்டமன்றத் தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார். சிங் ஒரு சமூக சேவகர்.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுசரிதா சிங் அவதேஷ் குமார் சிங்கின் மகள் ஆவார். தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலை படிப்பினை முடித்த பிறகு, சரிதா சிங் சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார். பிப்ரவரி 2015-ல் இவருக்கு 28 வயது. இவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான ராம் நகரில் வசித்துவருகிறார். இவர் கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை உள்ளடக்கிய பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பூர்வாஞ்சலி ஆவார்.[1]
அரசியல்
தொகுசரிதா சிங், ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் பிரிவான சத்ர யுவ சங்கர்ஷ் சமிதியின் தலைவர் ஆவார்.[2]
பிப்ரவரி 2015-ல் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தில்லியின் ஆறாவது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்களில் சிங்கும் ஒருவராவார். இவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள்.[3] மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களில் வெற்றி பெற்றது. சிங் ரோத்தாஸ் நகர் சட்டமன்றத் தொகுதியில் 62,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்தர் மகாஜனை (ஜிதேந்தர் குமார்) 7,874 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முகேஷ் ஹூடாவை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் மகாஜன் தோற்கடித்தார்.[3]
தேர்தல் பிரச்சாரத்தின் போது, வடகிழக்கு தில்லியில், மாலையில் இவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சிங்கின் காரை இரும்பு கம்பிகள் மற்றும் மரக் கட்டைகளால் தாக்கி சேதப்படுத்தினர்.[6] பூர்வாஞ்சலிலிருந்து குடியேறிய பெருமளவிலான மக்களைத் திருப்திப்படுத்த இவர் ஆம் ஆத்மி கட்சியால் களமிறக்கப்பட்டதாக தி இந்து குறிப்பிட்டது.[1]
பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | 2015 | 2020 | தில்லி சட்டமன்ற உறுப்பினர் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "AAP woos Purvanchal voters". The Hindu. 31 January 2015. http://www.thehindu.com/news/cities/Delhi/aap-woos-purvanchal-voters/article6841172.ece. பார்த்த நாள்: 21 February 2015.
- ↑ "AAP names 8 more nominees, completes list for Delhi Assembly elections". CNN IBN. PTI. 3 January 2015 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150105162645/http://ibnlive.in.com/news/aap-names-8-more-nominees-completes-list-for-delhi-assembly-elections/521012-37-64.html. பார்த்த நாள்: 21 February 2015.
- ↑ 3.0 3.1 "6 Women Candidates Who Won Delhi Elections". Huffington Post. 2015-02-10. http://www.huffingtonpost.in/2015/02/10/delhi-assembly-elections_n_6651324.html. பார்த்த நாள்: 21 February 2015.
- ↑ "Election Result". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 15 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Assembly Elections 2015 Results, Election Commission of India பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Delhi polls: AAP candidate Sarita Singh's car attacked". Economic Times. 3 February 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-02-03/news/58751776_1_delhi-polls-aap-north-east-delhi. பார்த்த நாள்: 21 February 2015.