சர்தால்

இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில பிரதேசம்

சர்தால் (Sarthal) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள கிசுத்துவார் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதி சர்தால் தேவி கோயிலுக்குப் பெயர் பெற்றது.[1]

சர்தால்
Sarthal
சர்தால் Sarthal is located in ஜம்மு காஷ்மீர்
சர்தால் Sarthal
சர்தால்
Sarthal
இந்தியாவின் சம்மு காசுமீரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°13′54″N 75°49′13″E / 33.231768°N 75.820194°E / 33.231768; 75.820194
நாடு இந்தியா
ஒன்றியப் பிரதேசம்சம்மு காசுமீர்
மாவட்டம்கிசுத்துவார்
மொழிகள்
 • அலுவல்உருது, ஆங்கிலம்
 • பேச்சுகாசுமீரி மொழி, கோசிரி மொழி, கிட்டுவாரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
182204
கிசுத்துவார் நகரிலிருந்து தொலைவு25 கிலோமீட்டர்கள் (16 mi)
சம்முவிலிருந்து தொலைவு250 கிலோமீட்டர்கள் (160 mi)
இணையதளம்kishtwar.nic.in

அன்னை சர்தால் தேவி ஆலயம்

தொகு

ஓர் இந்து மத ஆலயமான தேவி சர்தால் மாதா ஆலயம் சர்தால் யாத்திரை என்று அழைக்கப்படும் வருடாந்திர யாத்திரையின் காரணமாக புகழ் பெற்ற ஆலயமாகும். துர்கா தேவியின் மறு அவதாரமாகக் கருதப்படும் இந்த தேவியின் சிலை, முதலில் கிசுத்துவாரின் அரசர் அகர் தேவ் காலத்தில் உள்ளூர் மக்களால் கற்களால் செதுக்கப்பட்டது. பின்னர் 1936 ஆம் ஆண்டில் மகாராசா அசி சிங்கால் புதுப்பிக்கப்பட்டது. இது தோராயமாக கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலும் குளிர்காலத்தில் இந்த ஆலயம் பனியால் மூடப்பட்டிருக்கும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "J-K: Three-day long traditional Sarthal Devi Yatra begins in Kishtwar's Sarkoot". Asian News International. 18 July 2021. https://www.aninews.in/news/national/general-news/j-k-three-day-long-traditional-sarthal-devi-yatra-begins-in-kishtwars-sarkoot20210718221929/. 
  2. "Sarthal Devi Yatra – 2021". www.kishtwar.nic.in. 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்தால்&oldid=4090340" இலிருந்து மீள்விக்கப்பட்டது