சர்மத் சிந்தி
சர்மத் சிந்தி (Sarmad Sindhi)( சூலை 1961 - 27 திசம்பர் 1996)(சிந்தி : سرمد سنڌي)( உருது :سرمد سندھی) சிந்தி நாட்டுப்புற இசையில் சிந்தி நாட்டுப்புற பாடகர், சிந்தி மொழியின் பாடலாசிரியர் ஆவார். சிந்தி இலக்கியம் மற்றும் சிந்தி இசையின் பொற்காலத்தின் சிறந்த பாடகர்களில் இவர் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2]
சர்மத் சிந்தி | |
---|---|
சர்மத் சிந்தி இளமையில் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | عبدالرحمن مغل |
இயற்பெயர் | அப்துல் ரெகுமான் முகல் عبدالرحمن مغل |
பிறப்பு | 7 சூலை 1961 பிரியோலை கைப்பூர் மாவட்டம், சிந்து, பாக்கித்தான் |
பிறப்பிடம் | சிந்தி மக்கள் |
இறப்பு | 27 திசம்பர் 1996 | (அகவை 35)
இசை வடிவங்கள் | கிராமிய இசை, சிந்தி இசை |
தொழில்(கள்) | நாட்டுப்புற பாடகர், பின்னணிப் பாடகர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு தாள வாத்தியம் |
இசைத்துறையில் | 1978–1996 |
வெளியீட்டு நிறுவனங்கள் | தார் தயாரிப்பு, என். பி. தயாரிப்பு |
இணைந்த செயற்பாடுகள் | அனைத்து சிந்தி இசை வடிவங்கள் |
இவர் தனது மிகவும் பிரபலமான பாடலான 'துஹிஜி யாத் ஜி வாரி ஆ வீர்' உட்பட அனைத்து வகையான நாட்டுப்புறப் பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் மற்றொரு பிரபலமான பாடல் 'பியார் மஞ்சரன் பெங்கோ லோடே லோலி தியான்' இன்னும் கேட்கப்படுகிறது. இது இவரது தலைமுறையின் கீதமாக மாறியது.[3][4]
பாடும் தொழில்
தொகுசர்மத் சிந்தியின் பாடல் வரிகள் '"சிந்து உச்சி ஆ, சிந்தி உச்சி ஆ" (சிந்து பெரியது) போன்ற மாகாணத்தில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டது.[5]
மரூ லோலி மற்றும் துஹிஞ்சி யாத் ஜி வாரி ஆ வீர் ஆகியவை இவரது முதல் பாடல்களாகும். இவை ரேடியோ பாக்கித்தான், ஐதராபாத்தில் ஒளிபரப்பப்பட்டன. இவரது சில பாடல்கள் சராய்கி மொழியிலும் உள்ளன.[6]
பெருமையும் இறப்பும்
தொகுசர்மத் சிந்தி பாடினிலிருந்து கராச்சிக்கு 27 திசம்பர் 1996 நாளன்று திரும்பிக் கொண்டிருந்தபோது, இவரது வாகனம் சரக்குந்து மீது மோதியதில் இவர் தனது நண்பர்களுடன் படுகாயமடைந்தார். காயமடைந்த சர்மத் சிந்தியினைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.[7][1][2][5]
சிந்தி அடாபி சங்கத்தின் (சிந்தி எழுத்தாளர்கள் சங்கம்) 2017ஆம் ஆண்டில் இவரது நினைவு தினத்தை கைர்பூர் மாவட்டத்தின் உள்ளூர் நகரமான பிரியாலோயில் இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தியது. இதில் கவிஞர் சஜ்ஜத் மிரானி, ரோஷன் ஷேக் மற்றும் சயீத் சிந்தி உட்படப் பல இலக்கியவாதிகள் உரையாற்றினர். இந்த சந்தர்ப்பத்தில், பேச்சாளர் உள்ளூர் சமூகத்தில் இவரது சமூகப் பணிகளைக் குறிப்பிட்டார். மேலும் இவர் ஒரு பாடகர் மட்டுமல்ல, இவர் ஒரு சமூக சேவகர் என்றும் அறியப்பட்டார். இவர் பல ஏழைக் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவளித்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Singer Sarmad Sindhi remembered Dawn, Published 28 December 2017, Retrieved 7 December 2020
- ↑ 2.0 2.1 Death Anniversary of Singer Rehman Mughal (Sarmad Sindhi) (videoclip also features a tribute to him in Sindhi language) Radio Pakistan website, Published 26 December 2019, Retrieved 7 December 2020
- ↑ "'Sarmad Sindhi' set to hit screens on". gaana.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 December 2020.
- ↑ "'Biography of Sindhi Classical Music Artist Sarmad Sindhi'". Media Music Mania (in ஆங்கிலம்).
- ↑ 5.0 5.1 Profile of Sarmad Sindhi on SindhiAwaz website Retrieved 7 December 2020 . He was murdered
- ↑ Profile of Sarmad Sindhi on Pak101.com website Retrieved 7 December 2020
- ↑ Zuhaib Shar (29 December 2018). "Sarmad Sindhi (profile)". Dawn. https://www.dawn.com/news/1454263. பார்த்த நாள்: 7 December 2020.Zuhaib Shar (29 December 2018). "Sarmad Sindhi (profile)". Dawn. Retrieved 7 December 2020.