சவீர் தாராபூர்

கிரிக்கெட் நடுவர்

சவீர் தாராபூர் (Shavir Tarapore), (பிறப்பு 26 திசம்பர் 1957), ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களிலும் இருபது20 துடுப்பாட்டங்களிலும் செயலாற்றிவரும் ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். 1999ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் துவங்கி இதுவரை 9 ஒ.ப.து ஆட்டங்களிலும் இரண்டு இருபது20 ஆட்டங்களிலும் செயலாற்றியுள்ளார்.

சவீர் தாராபூர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சவீர் கேகி தாராபூர்
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை வீச்சு கழல் திருப்பம்
பங்குநடுவர்
நடுவராக
தேர்வு நடுவராக0 (-–-)
ஒநாப நடுவராக9 (1999–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்தரம்
ஆட்டங்கள் 6
ஓட்டங்கள் 20
மட்டையாட்ட சராசரி 5.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 15
வீசிய பந்துகள் 474
வீழ்த்தல்கள் 9
பந்துவீச்சு சராசரி 37.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–
மூலம்: Cricinfo, 19 திசம்பர் 2009

மேலும் கர்நாடக மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக 1980/81 முதல் 1986/87 வரை ஆடியுள்ளார். ஆறு ஆட்டங்களில் 20 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தனது கழல்திருப்பப் பந்துவீச்சால் ஒன்பது விக்கெட்களை 37.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார். மூன்று பந்துகளை பிடித்து மட்டையாளரை வெளியேற்றியுள்ளார்.

சுரேஷ் சாத்திரிக்கு மாற்றாக ப.து.அவின் பன்னாட்டு நடுவர் குழாமில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளார்.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவீர்_தாராபூர்&oldid=2719712" இலிருந்து மீள்விக்கப்பட்டது