சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளரும் ஆவார்.[1] அரசியல், சமூக மட்டத்தில் ஏற்படும் பல்வேறு சம்பவங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து விவாதப் பொருளாக்கியுள்ளார். சவுக்கு டாட் நெட், சவுக்கு ஆன்லைன் உள்ளிட்ட தளங்களை நடத்திப் பின்னர் சவுக்கு மீடியா என்கிற ஊடகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார்.[2][3]
சவுக்கு சங்கர் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
பணி | அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், முன்னாள் உதவியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை |
அமைப்பு(கள்) | சவுக்கு மீடியா |
உறவினர்கள் | சசிகாந்த் செந்தில் |
தனி வாழ்க்கை
தொகுசவுக்கு சங்கர் என்று அறியப்படும் இவரின் இயற்பெயர் ஆச்சிமுத்து சங்கர். இவரது தந்தை ஆச்சிமுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். திருநெல்வேலியில் பிறந்து, திருச்சியில், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் சில காலம் படித்து, சென்னையில் குடியேறினார். பத்தாவது வகுப்பு படித்திருந்த நிலையில், 1991 சூனில் தந்தை மறைவிற்குப் பிறகு கருணை அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
பொது வாழ்க்கை
தொகுலஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் எஸ். கே. உபாத்தியாய்க்கும் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதிக்குமிடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவை தி டெக்கன் குரோனிக்கள் நாளிதழில் கசியவிட்டதாக இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.[1][4] 2010 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திரட்டி எழுதிய ஒரு வலைப்பதிவிற்கு இவர் கைது செய்யப்பட்டார்.[1][5] பின்னர் இவர் தனது வலைப்பதிவை சவுக்கு இணையத்தளமாக மாற்றி தொடர்ந்து அரசியல் கருத்துக்களை எழுதி வந்தார்.[5] 2014 இல் பிறரை புண்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் அதற்குத் தடை விதித்தார்.[6] அதன் பிறகு பிரபல யூடியூப் அலைவரிசைகளில் அவர் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். 2023 இல் தனியாக சவுக்கு மீடியா என்ற யூட்டியூப் ஊடகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
கைதுகள்
தொகு2008 இல் லஞ்ச ஒழிப்புத் துறையில் தகவல்களைக் கசியவிட்டதற்காக சி.பி.சி.ஐ.டி காவல்துறையால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்தார்.[7] 2010 இல் மீண்டும் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
2022 செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்தது.[8] அதனால் இவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவில் மதுரை உயர் நீதிமன்றம் 2022 நவம்பரில் இவருக்கு பிணையில் விடுவித்தது.[9]
காவல்துறையினரைப் பற்றி அவதூறு பரப்பியதாக 2024 மே 4 அன்று கோவை கணினிக் குற்றப்பிரிவுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[10] மேலும் இரண்டு தடவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் 2024 செப்டம்பர் 25 அன்று உச்சநீதிமன்றம் இவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டது.[11]
முக்கிய வழக்குகள்
தொகுஇவர் யூடியூப் அலைவரிசையில் வெளியிட்ட காணொளியால் லைகா நிறுவனம் இவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது. வழக்கின் தீர்ப்பில், லைகா நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க இவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.[12][13]
ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், விகடன் இயக்குநர்கள், மாரிதாஸ் மற்றும் இவர் மீது மிரட்டல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.[14] பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[15] ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக இவர் பேசக்கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் 2022 செப்டம்பரில் தடை விதித்தது.[16]
சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை இவர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.[17]
கவனம் பெற்ற செய்திகள்
தொகு2ஜி தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் சரத்குமார் மற்றும் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் தொடர்பான உரையாடலை முதலில் வெளியே கொண்டுவந்தார்.[18] ஜெ. ஜெயலலிதா தொடர்புடைய வழக்கில் நீதிபதி சி.ஆர். குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் உள்ள பிழைகளை முதலில் சுட்டிக்காட்டினார்.[19] தமிழகக் காவல்துறையினரிடம் இருந்த ஆர்டர்லி முறையை இவர் வெளிக் கொண்டுவந்ததன் மூலம் அந்த முறையைத் தடைசெய்தது உயர்நீதிமன்றம்.[20]
எழுதிய நூல்கள்
தொகுஇவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு.
புத்தகம் | ஆண்டு | பதிப்பகம் |
---|---|---|
ஊழல் - உளவு - அரசியல் | 2017 | கிழக்கு பதிப்பகம் |
மோடி மாயை | 2018 | கிழக்கு பதிப்பகம் |
வேள்வி | 2018 | கிழக்கு பதிப்பகம் |
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள் | 2019 | கிழக்கு பதிப்பகம் |
கேள்வி எண் 17182 | 2023 | கிழக்கு பதிப்பகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Achimuthu Sankar: A loose canon or a homegrown Assange?". Business Standard. http://www.business-standard.com/article/current-affairs/achimuthu-sankar-a-loose-canon-or-a-homegrown-assange-114020700282_1.html.
- ↑ "SAVUKKU MEDIA (OPC) PRIVATE LIMITED". insiderbiz. பார்க்கப்பட்ட நாள் 5 May 2024.
- ↑ "About Us". savukkuonline. பார்க்கப்பட்ட நாள் 5 May 2024.
- ↑ "சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
- ↑ 5.0 5.1 "Court blocks Tamil 'Assange' Shankar's website savukku.net". Archived from the original on 5 March 2014. பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
- ↑ "HC directs cyber law division to block Savukku website". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-directs-cyber-law-division-to-block-savukku-website/article5737265.ece. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "'Savukku' Shankar: Is he India's Julian Assange?". ரீடிப். https://m.rediff.com/news/report/savukku-shankar-is-he-indias-julian-assange/20140210.htm. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
- ↑ "ஜாமீனில் விடுதலையானார் சவுக்கு சங்கர்: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராக நிபந்தனை". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
- ↑ "போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-defamation-of-police-chavuk-shankar-arrested--/3615962. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "ஜாமீனில் வந்த சவுக்கு சங்கர், முதலமைச்சர் மீது கடும் விமர்சனம்". Zee Hindustan Tamil. 2024-09-25. பார்க்கப்பட்ட நாள் 2024-09-26.
- ↑ "சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை! லைகா வழக்கில் உத்தரவு". ஜீநியூஸ். https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-has-ordered-savukku-shankar-to-be-restrained-from-making-defamatory-comments-about-lyca-company-494947. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "லைகா நிறுவனம் குறித்து பேச்சு... சவுக்கு சங்கரின் வீடியோவை முடக்கியதாக யூடியூப் தகவல்!". தமிழ் இந்து. https://kamadenu.hindutamil.in/state/savukku-shankar-video-case-allegedly-linked-to-drug-trafficking-gang-lyca. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "முன்னணி வார இதழ், சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு!". சமயம். https://tamil.samayam.com/latest-news/state-news/case-registered-against-vikatan-savukku-sankar-maridhas-one-kevin-arrested-after-g-square-compliant/articleshow/91736584.cms. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "No basis for arraigning Junior Vikatan directors, Maridhas and ‘Savukku’ Shankar in FIR: Chennai Police Commissioner". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/no-basis-for-arraigningjunior-vikatandirectors-maridhasand-savukku-shankar-in-fir-chennai-police-commissioner/article65462900.ece. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "Madras HC restrains Savukku Shankar from passing comments on G Square Realtors". தி நியூஸ் மினிட். https://www.thenewsminute.com/tamil-nadu/madras-hc-restrains-savukku-shankar-passing-comments-g-square-realtors-167719. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ "அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து- சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்". மாலைமலர். https://www.maalaimalar.com/news/state/defamatory-comment-on-minister-senthil-balaji-savukku-shankar-fined-rs1-lakh-623519. பார்த்த நாள்: 4 May 2024.
- ↑ url=https://soundcloud.com/savukku/jaffer-sait-and-sharad-kumar
- ↑ "எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ?". சவுக்கு ஆன்லைன். Archived from the original on 15 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 May 2024.
- ↑ "Higher police officials using personnel as orderlies a clear misconduct: Madras HC". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://indianexpress.com/article/cities/chennai/higher-police-officials-using-personnel-as-orderlies-a-clear-misconduct-madras-hc-8051461/. பார்த்த நாள்: 4 May 2024.