மாரிதாஸ் மலைச்சாமி

இந்திய அரசியல் விமர்சகர், யூடுபர், நூலாசிரியர்

மாரிதாஸ் மலைச்சாமி (Māridhās Malaichāmy),[2] அவரது யூடியூப் சேனலான Maridhas Answers மூலம் அறியப்பட்டவர், தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், ஊடகவியலாளர், பேராசிரியர், அரசியல் விமர்சகர் சமூக ஆர்வலர் மற்றும் நூலாசிரியர்.[3] அவர் தேசியவாத சித்தாந்தத்தை ஆதரிப்பவர்.[4][5][6][7][8]

திரு
மாரிதாஸ் மலைச்சாமி
Māridhās Malaisāmy
பிறப்புமாரிதாஸ். ம
6 மார்ச் 1984
மதுரை, தமிழ்நாடு, இந்தியா[1]
தேசியம்இந்தியன்
இனம்தமிழர்
கல்விBE, ME, PhD
பணி
செயற்பாட்டுக்
காலம்
2017
அறியப்படுவதுYoutube பதில்கள்
சமயம்சைவம்
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடங்கள்
சந்தாதாரர்கள்492,000

16 டிசம்பர் 2021 அன்று தகவமைக்கப்பட்டது
வலைத்தளம்
maridhasanswers.com

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 6 மார்ச் 1984 இல் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் தாய் அமுதா மற்றும் தந்தை மலைச்சாமி ஆகியோருக்கு பிறந்தார். அவர் தற்போது மதுரை அண்ணாநகரில் தனது அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு வசித்து வருகிறார்.[9] இவருக்கு மகேஷ் மற்றும் சதீஷ் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். தமிழ் வரலாறு, கலாச்சாரம், இலக்கியம் போன்றவற்றைப் நன்கு படித்தவர்.[10] பொறியியலில் மதுரை SACS MAVMM கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பும், காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் படித்தார்.

"நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்", "உள்ளாட்சித் தேர்தல் மாணவர்கள் உணர வேண்டிய உண்மை என்ன?" மற்றும் "நகர்ப்புற நக்சலிட்டிகளை நான் ஏன் வெறுக்கிறேன்" என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.[11] உள்ளூர் அரசியலிலும் அவர் நன்கு அறிந்தவர்.

யூடியூப் செயல்பாட்டாளர்

தொகு

மரிதாஸ், பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் தனது மாணவர்களிடமும் ஆதரவாளர்களிடமும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்கவில்லை, ஆனால் எந்தக் கட்சியையும் கண்மூடித்தனமாக நம்புவதற்குப் பதிலாக, அவ்வாறு செய்வதற்கு முன் ஒரு முழுமையான ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 27 ஆகஸ்ட் 2019 அன்று #ISupportMaridhas என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து மரிதாஸ் தமிழகத்தில் முக்கியத்துவம் பெற்றார்.[4]

அவர் தனது புத்தகங்களில் அனைத்து மதங்களுக்கும் அதிக மரியாதை கொடுத்துள்ளார். ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் பரவும் பொய்யான செய்திகளுக்கு எதிராகவும் அவர் இருக்கிறார்.

தேசவிரோதிகள், பிரிவினைவாதிகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களான சில ஊடக நிறுவனங்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.[12][13][14][15]

சட்ட வழக்குகள்

தொகு

2021 இல், அவர் மீது மாநிலத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் முஸ்லிம் கட்சிகள் செல்வாக்கை பயன்படுத்தி பல வழக்குகளை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டர். அவரும் பல நாட்கள் சிறையிலும் இருந்தார். ஆனால், அனைத்து வழக்குகளும் அடிப்படை ஆதாரமற்றவை என உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.[16][17][18][19]

குறிப்புகள்

தொகு
  1. குமார், என். வினோத் (13 December 2021). "YouTuber Maridhas has got Tamil Nadu BJP bickering". The Federal (Chennai: The Federal). https://thefederal.com/states/south/tamil-nadu/youtuber-maridhas-has-got-tamil-nadu-bjp-bickering/. 
  2. Regi, Abhay. "The Hindu Right's purge of progressive Tamil television newsrooms". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  3. Neelakandan, Aravindan. "Arrest Of Ace YouTuber Maridhas No Surprise As DMK Back To Old Ways". Swarajyamag (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  4. 4.0 4.1 கரிகாலன், இரா செந்தில். "மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: சீமான் எழுப்பும் குரலுக்குப் பின்னால் இருப்பது என்ன?". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  5. "Madras High Court Issues Notice to Right-wing YouTuber Maridhas". NewsClick (in ஆங்கிலம்). 2020-07-30. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  6. Dec 22; 2021; Ist, 04:41. "HC notice to police on YouTuber plea | Madurai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-03. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. "யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  8. Editor, Chief (2020-04-06). "Maridhas Wiki, Biography, Age, Family, Images & More". wikimylinks (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17. {{cite web}}: |last= has generic name (help)
  9. "மாரிதாஸ்". Vikatan.com. Vikatan. n.d. பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
  10. Kiran, Jessica (2020-07-14). "Maridhas social activist Wiki ,Bio, Profile, Unknown Facts and Family Details revealed". TheNewsCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  11. Kumar, Harish (2019-08-27). "Maridhas Wiki, Biography, Age, Family, Images & More". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  12. "மாரிதாஸ் பரப்பிய வதந்திகள், பொய்களின் தொகுப்பு !". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  13. "சமச்சீர் கல்வி தொடங்கி பள்ளிக் கழிப்பறை வரையில் மாரிதாஸ் கூறிய பொய்கள் !". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-22. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  14. "Blogger sued by TV channel and editor over 'baseless allegations'". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-07-29. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  15. "'No compromise with YouTuber Maridhas': Senior journalist M Gunasekaran". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
  16. The Hindu. 
  17. Dec 23, Kaushik Kannan / TNN /; 2021; Ist, 17:00. "Madras high court quashes yet another FIR against YouTuber Maridhas | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  18. "Madras HC quashes one more FIR lodged against YouTuber Maridhas". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
  19. manimegalai.a. "Maridhas Released : சண்டையில் எந்த சமரசமும் இருக்காது.. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தெறிக்கவிட்ட மாரிதாஸ்.!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரிதாஸ்_மலைச்சாமி&oldid=4074570" இலிருந்து மீள்விக்கப்பட்டது