சவூதி தேசிய நாள்


சவூதி அரேபியா தேசிய நாள் (Saudi Arabia National Day அரபு: اليوم الوطني) சவூதி அரேபியாவில், ஆண்டுதோறும் செப்டம்பர் 23 ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது.[1] இந்நாள், சவுதி இராச்சியத்தின் முதல் அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ் என்பவரை நினைவுகூரும் வகையில் 1932 ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்பட்டு வருகிறது.[2][3]

சவூதி தேசிய நாள்
اليوم الوطني للمملكة العربية السعودية
Saudi National Day
Flag of Saudi Arabia.svg
அதிகாரப்பூர்வ பெயர்சவூதி அரேபியா தேசிய நாள்
கடைபிடிப்போர் சவூதி அரேபியா
வகைதேசியம்
முக்கியத்துவம்சவூதி அரேபியா தாபித்தல்
நாள்ஒவ்வொரு செப்டம்பர் 23 ஆம் நாள்
நிகழ்வுஆண்டுதோறும்

சிறப்பு விழாதொகு

சவூதி தேசிய நாளை ஆடம்பரமாகவும், கோலாகலமான விழாவாக கொண்டாட சவூதி அரேபியா முழுவதும் சாலைகள், மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சவூதியின் கொடிகளால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும் அனைவரையும் சிறப்பிக்கும் நிகழ்ச்சிகள், மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.[3]

2014 சவூதி தேசிய நாள்தொகு

2014, செப்டம்பர் 23 இல், சவூதி தேசிய நாளையொட்டி, சவூதியின் தேசியக் கொடியை முறையாக ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, உலகின் மிக உயரமான 171.4 மீட்டர் கொடிக்கம்பமும், அதற்கான கொடி 570 கிலோ எடையும் கொண்ட, ஒரு பிரமாண்டமான கொடிக்கம்பம் நிர்மாணிக்கப்பட்டது.[4] சவூதியின் பெரும் நிறுவனங்களில் ஒன்றான "அப்துல் லத்தீப் ஜமீல் சமூக குழுமம்" (Abdul Latif Jameel Community Initiatives ALJCI) என்ற நிறுவனமும், ஜித்தா நகராட்சியும் இணைந்து இக்கொடிக்கம்பத்தை சவூதி அரேபியாவிற்காக நிறுவியுள்ளன.[5]

சான்றாதாரங்கள்தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  3. 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  4. "உலகின் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில் சவூதி தேசியக் கொடி!". warchive.inneram.com (தமிழ்). 21 செப்டம்பர் 2014 17:22. 2016-09-023 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "The National Day (23th September)". www.alj.com (ஆங்கிலம்). © 2015, 2016. 2016-09-023 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவூதி_தேசிய_நாள்&oldid=3243373" இருந்து மீள்விக்கப்பட்டது