சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை

சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை (Sahar Elevated Access Road, சுருக்கமாக SEAR), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை மாநகரத்தில் அமைந்த கட்டுப்படுத்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் விரைவுச் சாலையாகும்.[1] இது மேற்கில் மேற்கு விரைவு நெடுஞ்சாலையை, வில்லே பார்லேயின் அனுமன் நகர் சந்திப்பில் சந்திக்கிறது. மேலும் இது கிழக்கில் சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கிறது.[2][3] 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நான்கு வழிச்சாலையில், பாதசாரிகளுக்கு நடைமேடைகளும், பாலத்தின் கீழ் சுரங்கங்களும் கூடியது.[4]

சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை
Map
சிவப்பு நிறத்தில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலையின் வரைபடம்
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு மும்பை பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம்
நீளம்:2.2 km (1.4 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
12 பிப்ரவரி 2014 – present
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மேற்கு விரைவு நெடுஞ்சாலை
கிழக்கு முடிவு:சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரா
முக்கிய நகரங்கள்:மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு

சிக்னல் இல்லாத, இடது பக்கம் 3, வலது பக்கம் 3 என ஆறு வழித்தடங்கள் கொண்ட சாகர் உயர்த்தப்பட்ட 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அணுகல் சாலை[5], மேற்கு மும்பையின் வில்லே பார்லே பகுதியில் உள்ள அனுமன் நகர் சந்திப்பில் துவங்கி, சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் T2 முனையத்தில் முடிவடைகிறது,[2]

இந்த மேம்பால அணுகல் சாலையானது சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு செல்லும் நேரம் வெகுவாக குறைக்கிறது.[3][6]

மேற்கோள்கள் தொகு