மேற்கு விரைவு நெடுஞ்சாலை
மேற்கு விரைவு நெடுஞ்சாலை (Western Express Highway, சுருக்கமாக: WEH)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் வரை நீளும் 25.33 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலையாகும். இந்த விரைவு நெடுஞ்சாலை மொத்தம் 8 முதல் 10 வரையிலான வழித்தடங்கள் கொண்டது.[3] இச்சாலை மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி விரிவாக்கம் அடைந்து, வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-இல் இணைகிறது. இச்சாலை மும்பையின் புறநகர் பகுதிகளுக்கும், சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் விரைவான போக்குவரத்திற்கு உதவியாக உள்ளது.
மேற்கு விரைவு நெடுஞ்சாலை | |
---|---|
சிவப்பு நிறத்தின் மேற்கு விரைவு நெடுஞ்சாலையின் வரைபடம் | |
பாந்த்ராவில் மேற்கு விரைவு நெடுஞ்சாலை | |
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு மும்பை பெருநகரப் பகுதி வளர்ச்சி ஆணையம்,[1]இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | |
நீளம்: | 25.33 km (15.74 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | மீரா ரோடு |
கோரேகாவில் வீர சாவர்க்கர் ரோடு மற்றும் ஜெனரல் ஏ. கே. வைத்தியா மார்க் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை அந்தேரி-குர்லா சாலை அந்தேரியின் சாகர் சாலை வில்லே பார்லேயில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை பாந்த்ராவில் சுவாமி விவேகாநந்தா சாலை | |
தெற்கு முடிவு: | பாந்திரா-வொர்லி கடற்பாலம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராட்டிரா |
Districts: | மும்பை புறநகர் |
முக்கிய நகரங்கள்: | மும்பை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
சந்திப்புச் சாலைகள்
தொகுமேற்கு விரைவு நெடுஞ்சாலையுடன் கோரேகாவில் வீர சாவர்க்கர் சாலை மற்றும் ஜெனரல் ஏ. கே. வைத்தியா மார்க், ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை, சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை, அந்தேரி-குர்லா சாலை, அந்தேரியில் சாகர் சாலை, வில்லே பார்லேயில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை மற்றும் பாந்த்ராவில் சுவாமி விவேகாநந்தா சாலைகளும் இணைகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "MMRDA - Projects - Mumbai Urban Infrastructure Project". Mmrdamumbai.org. Archived from the original on 2010-07-23. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
- ↑ Chacko, Benita (18 September 2017). "Western Express Highway: Few know this arterial road honours a former diplomat". Indian Express. https://indianexpress.com/article/cities/mumbai/western-express-highway-few-know-this-arterial-road-honours-a-former-diplomat-4848546/.
- ↑ Brihanmumbai Municipal Corporation (BMC). "Urban Transportation" (PDF). BMC. p. 1. Archived from the original (PDF) on 2 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2014.